ADDED : ஆக 02, 2024 01:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக திரிவேணி சங்கமம் எனப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.
அதிகாலையில் கோயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கும். கூடுதுறை ஆற்றில் நீராடி விட்டு சங்கமேஸ்வரரை மக்கள் தரிசிப்பர். தேங்காய், பழம், பூ, காதோலை, கருகமணி படைத்து நதியை வழிபடுவர். பூஜையில் வைத்த மஞ்சள் கயிறை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் கட்டிக் கொள்வர். இதனால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.