
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மழை தெய்வமான மாரியம்மனுக்கு ஆடிப்பெருக்கன்று கஞ்சி, கூழ் படைத்து வழிபடுவர். ஆடிக்கூழ் வார்த்தால் அம்மன் அருளால் நாடு செழிக்க மழை பெய்யும். பெண்கள் விரதமிருந்து வேப்பிலை ஆடை உடுத்தியபடி சன்னதியை சுற்றி வருவர். நினைத்தது நிறைவேற அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்நாளில் அம்மனுக்கு மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் செய்து மாவிளக்கு ஏற்றினால் மனக்குறை தீரும்.