ADDED : ஜன 12, 2024 04:50 PM
* எளிமையாக வாழ்வது என்பது இறைநம்பிக்கையின் அடையாளம்.
* கோபத்தை கட்டுப்படுத்துபவன் உண்மையான வீரன்.
* தீய செயல்களைக் கண்டால் தடுத்து நிறுத்துங்கள்.
* துன்பத்திலும் பொறுமை கொள்வதே உண்மையான பொறுமையாகும்.
* சொத்துக்கள் வேண்டாமே. அதனால் உலக ஆசை கொண்டவர்களாக மாறிவிடுவீர்கள்.
* அதிகம் புகழக்கூடியவர்களை கண்டால் அவர்களின் முகத்தில் மண்ணை வாரிப்போடுங்கள்.
* புகழுக்காகவும், பகட்டுக்காகவும் ஆடை அணிபவனுக்கு மறுமை நாளில் இழிவின் ஆடை கிடைக்கும்.
* கர்வம், அகந்தை கொண்டவர்களுக்கு சுவர்க்கத்தில் இடமில்லை.
* ஒவ்வொரு மனிதனும் தவறிழைக்கக் கூடியவன்தான். தாம் செய்த குற்றத்திற்காக பிராயச்சித்தம் தேடிக்கொள்பவர்களே சிறந்தவர்கள்.
* அனுமதிக்கப்பட்ட நல்ல உணவுகளைச் சாப்பிட்டு, இறைத்துாதரின் வழிநடப்பவர்கள் சுவர்க்கத்தில் புகுவார்.
* பிறருக்கு உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதும்
சிறந்த செயல். சிறந்த செயல்.