ADDED : ஜன 12, 2024 04:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உறவினர்கள், நண்பர்களிடம் 'வாழ்வில் பிடிப்பு வைக்காதீர்' என அறிவுரை சொல்லுங்கள்.
* நிலையற்ற இந்த வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களை பலரும் அனுபவிக்கிறார்கள். ஆனால் ஒரு இன்பம் வந்ததும் பட்ட துன்பம்
மறந்து போகிறது. வாழ்க்கையில்
பிடிப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே கீழ்க்கண்ட விஷயங்களை நினைவில் வைத்திருங்கள்.
* உலகத்தை விட்டு செல்லும் மனிதனின் மனோ நிலையில் தொழுங்கள்.
* வருத்தம் தெரிவிக்கும்படியான வார்த்தையை பேசாதீர்கள்.
* பிறரிடம் உள்ள பொருள் மீது பேராசை வைக்காதீர்கள்.
பொருள் மீதான பற்றைக் குறைத்தால் வீண் பேச்சு வராது. பேச்சு குறையும்போது தீமை குறையும்.