
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
''நீங்கள் தான் எங்களது பிரச்னைக்கு தீர்வு சொல்ல வேண்டும்'' என முல்லாவிடம் கேட்டனர் இருவர்.
என்ன விஷயம் என விசாரித்தார். தொழுகை நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டே இருந்தோம் நாங்கள் செய்தது சரியா என கேட்டனர். அவர்களுக்கு தீர்வு சொல்லும் விதமாக அவ்விடத்தில் இருந்து நகர்ந்தார் முல்லா. ஒன்றும் சொல்லாமல் போகின்றீர்களே ஏன் என இருவரும் கேட்க...
அடிப்படை விஷயம் கூட தெரியாமல் உள்ளீர். உங்களிடம் பேசிப்புரிய வைக்க எதுவுமில்லை என்றார். இருவரும் திருதிரு என விழித்தவாறு அவர் போன திசையை பார்த்துக் கொண்டே நின்றனர்.

