ADDED : ஜன 31, 2023 11:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைச்சரிடம் 'எதற்கும் ஆசைப்படாதவர் யாராவது உள்ளாரா' என கேட்டார் மன்னர். அவரோ ஊர் கடைசியில் உள்ள பெரிய மரத்தின் கீழ் ஒருவர் வசிக்கிறார். அவர் அனைத்தையும் துறந்தவர் என பொய் சொன்னார். அதை உண்மை என நம்பி அவரை அழைத்து வர கூறினார் மன்னர்.
நாம் தான் அங்கு செல்ல வேண்டும் என்றார் அமைச்சர்.
போலியாக நடிக்க ஒருவரை ஏற்பாடு செய்தார். அவர் முன் பொன்,பொருள்களை வைத்து வணங்கினார் மன்னர். போலியானவரும் அவருக்கு ஆசி வழங்கினார். இந்நிலையில் நடித்தவருக்கு அமைச்சர் வெகுமதி வழங்க அதை வாங்க மறுத்தார் போலியானவர். அதற்கு அவர், ''மன்னரே என்னை வந்து வணங்கி விட்டார். ஆதலால் குடும்பத்திலுள்ள கடமைகளை நிறைவேற்றிவிட்டு ஞானியாக போகிறேன்'' என சொன்னார். எப்போது வேண்டுமானாலும் நகல் அசலாகும் என நினைத்தவாறே புறப்பட்டார் அமைச்சர்.

