
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு சமயம் நபிகள் நாயகம் வீதி வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மூலையில் செத்த ஆடு ஒன்று கேட்பாரற்று கிடந்தது. ''பார்த்தீர்களா... ஆட்டை இதன் உரிமையாளர் எத்தனை துச்சமாக மதித்திருந்தால் இப்படி செய்திருப்பார். இதற்கு காரணம் என்ன தெரியுமா'' எனக் கேட்டார்.
அதற்கு தோழர்கள், ''இது செத்துப்போய் விட்டது. செத்த ஆடு அற்பமானது தானே?'' என சொன்னார்கள். ''ஆம். உண்மை. செத்த ஆட்டை நீங்கள் எப்படி மதிக்கிறீர்களோ, அப்படிதான் இறைவன் இம்மையை மதிக்கிறான்'' என்றார்.
உலகில் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றும் இன்பத்தை அள்ளித் தருகின்றன. ஆனால் அதில் பல அபாயங்கள் நிறைந்துள்ளன. இப்படி தொல்லைகளும், விபரீதங்களும் நிறைந்த இம்மையில் நல்லதை செய்யுங்கள்.

