ADDED : பிப் 19, 2023 01:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டுக்கு வரும் உறவினர்கள் சாப்பிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று பலர் விரும்புவர். ஆனால் சிலரோ வந்தவர்கள் 'எப்போது கிளம்புவார்கள்' என காத்திருப்பர். சில வீடுகளில் வந்தவர்களை, 'வாருங்கள்' என ஒரு வார்த்தைக்கூட சொல்லமாட்டார்கள். இது தவறான விஷயம். வீட்டிற்கு வந்தவர்களை நல்லபடியாக உபசரிக்க வேண்டும். ஒருமுறை நபிகள் நாயகத்திடம், ''நான் ஒருவரது வீட்டிற்குச் சென்றேன். அவர் என்னை உபசரிக்கவில்லை. அவர் என் வீட்டுக்கு வந்தால், நானும் உபசரிக்காமல் இருக்கலாமா'' என ஒருவர் கேட்டார்.
''அப்படி செய்யாதீர்கள். அவரை உபசரிப்பதுதான் சிறந்தது'' என்றார்.

