* வந்துவிட்ட சோதனைகளுக்கும் வரப்போகும் சோதனைகளுக்கும் நிவாரணம் தருவதாக உள்ளது வழிபாடு. இது விதியையும் மாற்றிவிடும்.
ஆனால் மாசுபட்ட மனதுடன் செய்தால் அவன் ஏற்கமாட்டான்.
* இறைவன் மன்னிப்பதால் அடியாரின் கண்ணியம் உயர்ந்து விடுகிறது.
* உண்மையான அடியார்கள் பூமியில் பணிவோடு நடப்பார்கள். அறிவற்றவர்கள் அவர்களுடன் முறைகேடாக உரையாடினால், 'உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்' என்று கூறுவார்கள்.
* தர்மம் செய்வதால் பொருள் குறைவதில்லை.
* உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்னர் நீங்கள் பூமியில் பரவிச் செல்லும் மனிதர்களாக இருக்கிறீர்கள்.
* வறுமை, துன்பத்தின்போது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் பொறுமையுடன் நிலைத்திருப்பவர்கள் புண்ணியவான்கள்.
* அன்பு என்பது உறவினர்கள்மீது மட்டும் செலுத்தப்படுவதல்ல. அனைவர்மீதும் செலுத்தப்படுவதாகும்.