To type in English
(or)Press CTRL+G
To type in English
ஜூலை 15, 2024
மொத்த செய்திகள்: 233
கஜானா பெட்டி திறப்பு
ஷார்ட்ஸ்
15-Jul-2024
காங்கிரஸ் செய்த சூழ்ச்சி!
ஷார்ட்ஸ்
15-Jul-2024
நான் ஒப்புக்கொள்கிறேன்!
ஷார்ட்ஸ்
15-Jul-2024
வாராஹி அம்மனின் 10 அலங்காரங்கள்
ஷார்ட்ஸ்
15-Jul-2024
விழி மூடி யோசித்தால் தமன்னா தான்...!
வெப் ஸ்டோரீஸ்
15-Jul-2024
அய்யப்பன்தாங்கல் பாலஜி அவென்யூவில் உள்ள துலிவ் தக்சின் அடுக்குமாடி குடியிருப்பில், தினமலர் மற்றும் டைட்டில் ஸ்பான்சர் கிரேஸ் சூப்பர் மார்க்கெட், அசோசியேட் ஸ்பான்சர் நிசான் இணைந்து நடத்திய, தினமலர் ஆடி கார்னிவல் நிகழ்வு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், அக்குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் உற்சாகமாக மேடையில் நடனமாடி மகிழ்ந்தனர்.
இன்றைய போட்டோ
15-Jul-2024
பள்ளி மாணவர்களுக்கு உணவு ஊட்டிய அமைச்சர்
ஷார்ட்ஸ்
15-Jul-2024
புதுச்சேரியில் ஈபில் டவர்
ஷார்ட்ஸ்
15-Jul-2024
கர்நாடகாவுக்கு கரண்டை கட் பண்ணுங்க ஸ்டாலின்!
ஷார்ட்ஸ்
15-Jul-2024
பல்கலை தேர்வு முடிவு
கல்விமலர் செய்திகள்
15-Jul-2024
தொல்லியல் பயிற்சி
கல்விமலர் செய்திகள்
15-Jul-2024
சரித்திரம் பழகு: வீதி உலா
பட்டம்
15-Jul-2024
மனம் குவியும் இசை: ஹைட்ரலோபோன் அறிவோம்
பட்டம்
15-Jul-2024
நான்கில் ஒன்று சொல்
பட்டம்
15-Jul-2024
புவியைப் பற்றி
பட்டம்
15-Jul-2024
அமிழ்தமிழ்து: வடசொற்களைக் கண்டுபிடிக்கும் வழி
பட்டம்
15-Jul-2024
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
15-Jul-2024
சோளிங்கர் கோயிலில் துர்கா ஸ்டாலின்
ஷார்ட்ஸ்
15-Jul-2024
TATAவுக்கே இந்த நிலைமையா !
ஷார்ட்ஸ்
15-Jul-2024
கொடைக்கானல் சாலையில் சரிந்த ராட்சத மரம்!
ஷார்ட்ஸ்
15-Jul-2024
அசத்தலான Machine ! கட்டுமான பணி இனி EASY.
ஷார்ட்ஸ்
15-Jul-2024
மணிமுத்தாறு அருவி செல்ல தடை விதிப்பு!
ஷார்ட்ஸ்
15-Jul-2024
வால்பாறையில் கன மழை நிலச்சரிவு-பெருவெள்ளம்!
ஷார்ட்ஸ்
15-Jul-2024
தமிழக காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு
ஷார்ட்ஸ்
15-Jul-2024
காமராஜர் சிலைக்கு ரங்கசாமி மரியாதை
ஷார்ட்ஸ்
15-Jul-2024
வட மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் அதிகம்
ஷார்ட்ஸ்
15-Jul-2024
ஓட்டை கூரையை மறைக்க அரசு பஸ்சுக்கு பேண்டேஜ்
ஷார்ட்ஸ்
15-Jul-2024
ஒரு ஓட்டுக்கு ₹10 ஆயிரம்!
ஷார்ட்ஸ்
15-Jul-2024
வீட்டிற்குள் புகுந்த டாரஸ் லாரி
ஷார்ட்ஸ்
15-Jul-2024
டிஜிட்டல் பேனரை போர்த்தி செல்லும் அரசு பஸ்
ஷார்ட்ஸ்
15-Jul-2024
ரங்கோலியில் காமராஜர் போலீஸ் அதிகாரி அசத்தல்
ஷார்ட்ஸ்
15-Jul-2024
மாணவர்கள் மேஜிக் காமராஜரே வந்தார்!
ஷார்ட்ஸ்
15-Jul-2024
தென்காசியில் ராக்கெட் போலீஸ் படை குவிப்பு
ஷார்ட்ஸ்
15-Jul-2024
திராவிட மாடல் ஆட்சியில் ஒரு அணை கூட கட்டலை
ஷார்ட்ஸ்
15-Jul-2024
இன்றைய தினமலர் நாளிதழில் 15, ஜூலை, 24
ஷார்ட்ஸ்
15-Jul-2024
இன்றைய தினமலர் நாளிதழில் (15, ஜூலை, 2024)
ஷார்ட்ஸ்
15-Jul-2024
மேஷம்: அசுவினி: திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த வருவாய் வரும். அலுவலக நெருக்கடி குறையும். பரணி: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பணிபுரிபவர் ஆதரவாக இருப்பர்.கார்த்திகை 1: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
இன்றைய ராசி
15-Jul-2024
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். தொழில் போட்டியாளர்களால் சங்கடம் அடைவீர்.ரோகிணி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். தொழில் எதிரி விலகிச்செல்வர்.மிருகசீரிடம் 1,2: நேற்று இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வருமானத்தில் இருந்த தடை விலகும்.
இன்றைய ராசி
15-Jul-2024
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.திருவாதிரை: உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடை உண்டாகும். பணியாளர்களால் சிறு பிரச்னை தோன்றும். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் செயல் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.
இன்றைய ராசி
15-Jul-2024
கடகம்: புனர்பூசம் 4: அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும். ஆதாயமான நாள்.பூசம்: உடலில் சோர்வு தோன்றும். வரவு செலவில் நெருக்கடி உண்டாகும். கடும் போராட்டத்திற்குபின் முயற்சியில் வெற்றி காண்பீர்.ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
இன்றைய ராசி
15-Jul-2024
சிம்மம்: மகம்: திடீர் நெருக்கடியால் சங்கடத்திற்கு ஆளாவீர். பழைய பிரச்னை மீண்டும் உருவெடுக்கும். அமைதி காக்க வேண்டிய நாள்.பூரம்: விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர். சகோதரர்களால் லாபம் உண்டாகும்.உத்திரம் 1: மற்றவரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர். எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும்.
இன்றைய ராசி
15-Jul-2024
கன்னி: உத்திரம் 2,3,4: அலுவலகத்தில் உங்களை சோதிக்கும் அளவிற்கு சிலர் செயல்படுவர். வேலை பளு அதிகரிக்கும்.அஸ்தம்: எதிர்பார்த்த பணம் வரும். வரவின் காரணமாக சேமிப்பு உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.சித்திரை 1,2: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். முயற்சி வெற்றியாகும்.
இன்றைய ராசி
15-Jul-2024
துலாம்: சித்திரை 3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் செயலில் தெளிவு இருக்கும். நினைத்ததை சாதிப்பீர்.சுவாதி: செயல்களில் தடுமாற்றம் அடைவீர். எதிர்பார்த்தவற்றில் தாமதம் ஏற்படும். மனதில் குழப்பம் உண்டாகும்.விசாகம் 1,2,3: விலகிச் சென்ற வாடிக்கையாளர் உங்களைத்தேடி வருவர். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்.
இன்றைய ராசி
15-Jul-2024
விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். தொலைந்துபோன பொருள் உங்கள் கைக்கு வரும். அனுஷம்: உங்கள் செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர். அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.கேட்டை: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திட்டமிட்ட வேலை நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
இன்றைய ராசி
15-Jul-2024
தனுசு: மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள் பணிபுரியும் இடத்தில் நீங்கள் பதில் சொல்லும் நிலை உருவாகும்.பூராடம்: வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும்.உத்திராடம் 1: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். மேலதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர். நண்பர்கள் ஒத்துழைப்பால் நன்மை உண்டு.
இன்றைய ராசி
15-Jul-2024
மகரம்: உத்திராடம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் சிறு தடை உண்டாகும். லாபம் தள்ளிப்போகும்.திருவோணம்: தொழிலை விரிவு செய்வதற்காக நீங்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.அவிட்டம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.
இன்றைய ராசி
15-Jul-2024
கும்பம்: அவிட்டம் 3,4: நேற்றுவரை தடைபட்ட முயற்சி எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.சதயம்: செயல்களில் சிரமம் தோன்றும். வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்த வேண்டிய நாள்.பூரட்டாதி 1,2,3: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட பணம் வரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும்.
இன்றைய ராசி
15-Jul-2024
மீனம்: பூரட்டாதி 4: தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி விலகும். விருப்பம் நிறைவேறும்.உத்திரட்டாதி: வழக்கமான வேலைகளிலும் இன்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.ரேவதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் முயற்சி லாபமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
இன்றைய ராசி
15-Jul-2024
அசுவினி; அறிவாற்றலும், செயல்திறனும், இறையருளும் கொண்டு, நடப்பவை யாவும் அவன் செயலென எண்ணி வாழ்ந்துவரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதனின் சஞ்சார நிலையால் ஆரோக்கியம் சீராகும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் விருத்தியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். போட்டியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வழக்கு சாதகமாகும். இதுவரையில் இருந்த பிரச்சினைகள் விலக ஆரம்பிக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்ரமடைந்திருப்பதால் உங்களுடைய நேரடிப்பார்வை தேவைப்படும். பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மேலைநாட்டு தொடர்புகள் ஆதாயம் தரும். தன ஸ்தான குருவால் வருமானம் அதிகரிக்கும். நினைத்த காரியங்களை நினைத்தபடி செய்து லாபம் காண்பீர். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தொழில் விருத்தியாகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். எண்ணம் நிறைவேறும். மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி வரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விற்பனையில் லாபநிலை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். விரும்பிய வாகனம் வாங்க முடியும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 17, ஆக. 13.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18,25,27. ஆக. 7,9,16.பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள கேது பகவானை வழிபட விருப்பம் நிறைவேறும்.பரணி; மனதில் துணிவும், வாழ்வில் அதிர்ஷ்டமும், சமூகத்தில் செல்வாக்கும் கொண்டு நினைப்பதை சாதிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் உங்களைப் பாதுகாப்பார். உறவுகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். தன ஸ்தானத்தில் குரு செவ்வாய் இணைவு பெறுவதால் குரு மங்கள யோகம் உண்டாகும். செயல்கள் யாவும் ஆதாயமாகும். இதுவரையில் உங்களுக்கிருந்த பிரச்சினைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். வேலையில் இருந்த பிரச்சினை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு மேலிட செல்வாக்கு உண்டாகும். எதிர்பார்த்த பொறுப்பும் ஒரு சிலருக்கு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமும் எதிர்பார்த்த லாபமும் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். இழுபறியாக இருந்த விவகாரத்தில் வெற்றி ஏற்படும். புதிய பொன் பொருள் சேரும். பண வரவு திருப்தி தரும். மேலைநாட்டு முயற்சிகள் சாதகமாகும். அந்நியரால் ஏற்பட்ட சிக்கல் தீரும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிவோருக்கும் வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சந்திராஷ்டமம்: ஜூலை 17, 18. ஆக. 14.அதிஷ்ட நாள்: ஜூலை 24, 27. ஆக. 6, 9, 15.பரிகாரம்: துர்கையை வழிபட எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும்.கார்த்திகை 1 ம் பாதம்:; மன வலிமையும், துணிவும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடையும் யோகமும் கொண்டு பிறந்த நீங்கள் எங்கு இருந்தாலும் அங்கு தனித்துவத்துடன் பிரகாசிப்பவராக இருப்பீர்கள். பிறக்கும் ஆடி மாதம் முழுவதும் உங்கள் நட்சத்திரநாதன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலை பளு அதிகரிக்கும். உங்களைக்கண்டு பயந்திருந்தவர்கள் கை ஓங்கும் என்றாலும் தன ஸ்தானத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் குருவுடன் இணைவதால் எதிர்ப்புகளை இல்லாமல் செய்வீர்கள். நீங்கள் நினைத்ததை எல்லாம் நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள், சங்கடங்கள் விலகும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வதால் பொறுப்பும் பதவியும் நீடிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலைக்குரிய அனுமதி கடிதம் வரும். சனியின் பார்வைகளால் பல்வேறு சங்கடங்களை நீங்கள் சந்தித்துக்கொண்டிருந்த நிலையில் ஆடி மாதம் முழுவதும் சனி வக்ரகதி அடைவதால் உடல்நிலை முன்னேற்றம் காணும். உங்கள் செல்வாக்கும் வெளிப்படும். 6,8,10 ம் இடங்களுக்கு குரு பகவானின் பார்வை உண்டாவதால் துணிச்சலாகவும் தைரியமாகவும் செயல்படுவீர். வழக்கு விவகாரம் சாதகமாகும். தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும் வருமானம் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களின் கனவு நனவாகும். வேலைக்குரிய தகவல் வீடுதேடி வரும். பெண்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனக்கம் உண்டாகும். பணியாளர்களுக்கு உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற வருமானம் வரும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக முயற்சித்தவர்கள் விருப்பம் நிறைவேறும். விவசாயத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் சந்திராஷ்டமம்: ஜூலை 18. ஆக. 15.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 27, 28. ஆக. 1, 9, 10, 16.பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை காலையில் சூரியனை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
மாத ராசி பலன்
15-Jul-2024
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம் : நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றலும், அதிர்ஷ்ட நிலையையும் வாழ்க்கையாக கொண்டு பிரகாசித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் நட்சத்திர நாதன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் தடைப்பட்டிருந்த வேலைகள் எல்லாம் இனி விறு விறுவென நடந்தேறும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பணவரவு அதிகரிக்கும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்ரமடைந்திருப்பதால் தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். மெமோ, சஸ்பெண்ட் என்ற நிலை மாறும். உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பொருளாதார நிலை உயரும் வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் இடமாற்றம், பதவி உயர்வும் சிலருக்கு ஏற்படும். திருமண வயதினருக்கு வரன்வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பெண்களுக்கு கணவரின் ஆதரவுடன் தந்தை வழியாலும் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலர் புதிய இடம் வாங்குவீர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வரும். அரசியல்வாதிகள் நிலை உயரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 19. ஆக. 15.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 24, 28. ஆக. 1, 6, 10.பரிகாரம்: குருபகவானை வழிபட குறைகள் தீரும். நன்மை உண்டாகும்.ரோகிணி : தெளிவாகவும், திட்டமிட்டும் செயல்பட்டு வாழ்வில் முன்னேற்றத்தையும், யோகத்தையும் அடைந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் மாதமாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் நீங்கள் சந்தித்து வந்த பிரச்சினைகள், சோதனைகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் விலகப் போகிறது. தடைப்பட்ட பதவி உயர்வு, இடமாற்றம் இப்போது கிடைக்கும். வேலை பளுவால் அவதிப்பட்டு வந்த நிலை இனி மாறும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். ஜென்ம குருவால் அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் நிலை உயரும். செல்வமும், செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்காலத்திற்குரிய அடிப்படைகள் அமையும். திருமணம், குழந்தை பாக்கியம், சொத்து என்று சந்தோஷம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உங்கள் மன நிலையைப் புரிந்து கொண்டு வாழ்க்கைத் துணை செயல்படுவார். பிரிந்து சென்ற நண்பர்கள் தேடிவருவர். ஆலய வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பல வழியிலும் வருவாய் வரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். பெண்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணியில் இருந்த சங்கடங்கள் விலகும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். கலைஞர்கள் கனவு நனவாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாகும். சந்திராஷ்டமம்: ஜூலை 19, 20. ஆக. 16.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 24, 29. ஆக. 2, 6, 11, 15.பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட முயற்சிகள் வெற்றியாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம் ; தைரியமும் துணிச்சலும் கொண்டு மற்றவரால் சாதிக்க முடியாதவற்றை சாதித்து செல்வாக்குடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நன்மைகள் கூடி வரும் மாதமாகும். லாப ராகு, சகாய சூரியன், ஜென்ம குருவின் 5,7,9 ம் பார்வைகள் உங்கள் நிலையை உயர்த்தும். செல்வாக்கை அதிகரிக்கும். பணவரவை உண்டாக்கும். இழுபறியாக இருந்த முயற்சிகளில் வெற்றியை ஏற்படுத்தும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முடியாதென பிறர் விட்டுச்சென்ற வேலைகளையும் முடித்துக் காட்டுவீர்கள். பணியில் உங்கள் மீது ஏற்பட்ட பழிகள் நிரூபிக்க முடியாமல் போகும். இழுபறியாக இருந்த விசாரணை முடிவிற்கு வரும். ட்ரான்ஸ்பர், சஸ்பென்ஷன் உத்தரவுகள் மாறும். செய்துவரும் தொழிலில் இருந்த தடைகள் விலகும். வியாபாரம் முன்னேற்றமடையும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகி லாபம் தோன்றும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பெரியோரின் ஆதரவு நன்மைதரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் உண்டாகும். குழந்தைக்காக ஏங்கியவர்களின் ஆசை பூர்த்தியாகும். பூர்வீக சொத்தில் இருந்த சிக்கல் விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 20. ஆக.16.அதிர்ஷட நாள்: ஜூலை 18,24,27. ஆக. 6,9,15.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்கிட வாழ்க்கை வளமாகும்.
மாத ராசி பலன்
15-Jul-2024
மிருகசீரிடம் 3, 4: : முயற்சியை மட்டுமே மூலதனமாக கொண்டு நினைத்தவற்றில் சாதிக்கும் சக்தி பெற்ற உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் குரு பகவானும் அங்கே சஞ்சரித்து வருவதால் செலவுகள் பல வழியிலும் ஏற்படும் என்றாலும் மாதத்தின் முற்பகுதியில் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் தேவைக்கேற்ற பணம் வரும். பொன் பொருள் சேரும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். இழுபறியாக இருந்த விவகாரங்கள் முடிவிற்கு வரும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு ஆதாயம் அதிகரிக்கும். குருவின் பார்வைகளால் ஆரோக்கியம் சீராகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தினர் ஆலோசனை இக்காலத்தில் நன்மைதரும். பிறரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் செலுத்துவது அவசியம். யோசிக்காமல் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். அதை உங்களால் இப்போது நிறைவேற்ற முடியாமல் போகும். மேற்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 21.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 23, 27. ஆக. 5, 9, 14.பரிகாரம்: கருமாரி அம்மனை வழிபட சங்கடங்கள் நீங்கும்.திருவாதிரை: கற்ற கல்வியினாலும் பெற்ற அறிவினாலும் யோகமுடனும் செல்வாக்குடனும் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் வளர்ச்சிக்குரிய மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியாளர்களால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். திடீர் வரவுகளால் சங்கடங்கள் விலகும் என்றாலும் தொழில் காரகன் சனி வக்ரமடைந்திருப்பதால் எந்த ஒன்றையும் யோசித்து திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். மூன்றாமிடத்து அதிபதி தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகளால் உங்கள் வேலைகள் நடந்தேறும். மற்றவர்களால் சாதிக்க முடியாதவற்றையும் நீங்கள் சாதிப்பீர்கள். உங்கள் ராசியாதிபதி வக்ரமடைவதால் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை படித்துப்பார்த்து அதன்பிறகு கையெழுத்திடவும். குருவின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும். சந்தோஷத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்ப்புகள் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் வார்த்தைகளில் நிதானம் காக்க வேண்டும். இல்லையெனில் தலைமையின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள்.சந்திராஷ்டமம்: ஜூலை 21,22.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 22,23,31. ஆக. 4,5,13,14.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் போகும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: கல்வியறிவும், தெய்வீக ஞானமும் கொண்டு பிறருக்காக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் அறிவால் வெற்றி காணும் மாதமாக இருக்கும். விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் உங்கள் நட்சத்திர நாதன் சஞ்சரித்தாலும் அவருடைய மூன்று பார்வைகளும் உங்கள் வாழ்வில் வசந்தத்தை உண்டாக்கிடப் போகிறது. சுக ஸ்தானம், சத்ரு ஸ்தானம், அஷ்டம ஸ்தானங்களை குரு பார்ப்பதால் இதுவரை வேலை, அலைச்சல், சோர்வு என்று நெருக்கடிகளை சந்தித்து வந்தவர்களுக்கு இனி நிம்மதி உண்டாகும். தாய்வழி உறவுகள் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு இப்போது கிடைக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடமே உதவி கேட்டு வருவார்கள். பெண்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வாழ்க்கைத்துணையுடன் இனக்கமான நிலை உண்டாகும். சிறு சிறு பிரச்னைகளால் பிரிந்திருந்தவர்கள் இப்போது ஒன்றிணைவீர். புதிய முயற்சிகளில் ஈடுபடும்முன் நன்றாக யோசிப்பது அவசியம். வரவைவிட செலவு அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் செலவுகளில் சிக்கனம் அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூலை 22.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21,23,30. ஆக. 3,5,12,14.பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும். நன்மை அதிகரிக்கும்.
மாத ராசி பலன்
15-Jul-2024
புனர்பூசம் 4 ம் பாதம் ; தெளிவான ஞானத்துடன் தங்கள் வேலைகளில் திட்டமிட்டு செயல்பட்டு வாழ்வில் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதத்தை அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்லவேண்டும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதன் குரு பகவான் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். செயல்களில் லாபத்தை அதிகரிப்பார். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை அகற்றுவார். பணியாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகளை இல்லாமல் செய்வார். பிள்ளைகள் நிலையில் உயர்வை வழங்குவார். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு பாக்கியத்தை அருள்வார். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு தகுந்த வரனை தந்தருள்வார். உங்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். இதுவரை உத்தியோகம், தொழில் ஆகியவற்றில் இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு, இடமாற்றம் போன்றவை இக்காலத்தில் கிடைக்கும். இந்த நேரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களை பயமுறுத்தி வந்த சனி பகவான் வக்ரமடைந்திருப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட பயம் போகும். மருத்துவ சிகிச்சைக்கு நோய்கள் கட்டுப்படும். மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வரும். குடும்பத்தில் தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பணி உயர்வுக்காக காத்திருந்த பெண்களின் கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஜூலை 23.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20,21,29,30. ஆக. 2,3,11,12.பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.பூசம்; நீதி, நேர்மை, நியாயம் என்று ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு மனத்துணிவுடன் எவருக்கும் அஞ்சாமல் செயல்பட்டு வரும் உங்களுக்கு எப்போதும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியே உண்டாகும். பிறக்கும் ஆடி மாதம் உங்கள் வாழ்வில் திருப்பு முனையை உண்டாக்கும் மாதமாக இருக்கும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து அச்சத்தை உண்டாக்கி வந்த உங்கள் நட்சத்திர நாதன் சனி பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த பயம் விலக ஆரம்பிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பிறரின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கியிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். இனி உங்கள் சுய ஆற்றல் வெளிப்படும். சமூகம் உங்களை உணர ஆரம்பிக்கும். தொழில் உத்தியோகம் போன்றவற்றில் இருந்த தடைகள் விலகி ஆதாயம் உண்டாகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உங்களை நிரூபிப்பதற்காக தெளிவுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்டு வெற்றியடைவீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செவ்வாயால் குரு மங்கள யோகம் உண்டாகும். உங்கள் செயல்கள் யாவும் லாபமாகும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர் விருப்பம் நிறைவேறும். காவல், ராணுவம், தீயணைப்புத்துறைகளில் பணிபுரிவோர் செல்வாக்கு உயரும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் இப்போது வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வேலை வாய்ப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 23,24.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 20, 26, 29. ஆக. 2,8,11.பரிகாரம்: அமிர்தகடேசுவரரை மனதில் எண்ணி வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.ஆயில்யம்; வாழ்வின் அர்த்தம் தெரிந்து கல்வி கேள்விகளிலும் நினைத்த இலக்கை அடைவதிலும் முதன்மையானவராக வாழும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் மாதமாக இருக்கும். மாதம் முழுவதும் உங்கள் பாக்யாதிபதி, பஞ்சம ஜீவனாதிபதியின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த முயற்சிகள் நடந்தேறும். நிதி நிறுவனம், வங்கிகளில் டெபாசிட் செய்திருந்த பணம் வட்டியுடன் திரும்பவரும். அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனின் சஞ்சார நிலையும் மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறிய முதலீட்டிலும் பெரிய லாபம் கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் எளிதாக நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். மழலை பாக்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு முயற்சிகள் நிறைவேறும். ஒரு சிலர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனஸ்தாபத்துடன் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைவீர்கள். பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வரும். இழுபறியாக இருந்த பிரச்சினைகள் முடிவிற்கு வரும். வெற்றிமீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.சந்திராஷ்டமம்: ஜூலை 24,25.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20,23,29. ஆக.2,5,11,14.பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் வேண்டுவது நிறைவேறும். வாழ்க்கை வளமாகும்.
மாத ராசி பலன்
15-Jul-2024
மகம்: ஞானத்தோடு பிறந்த உங்களுக்கு பிறரை தலைமை தாங்கி வழிநடத்தும் ஆற்றல் இயல்பாகவே இருக்கும். ஆடி மாதம் உங்களுக்கு யோகமான மாதம். உங்கள் நட்சத்திர நாதன் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து குடும்பத்தில் குழப்பம், வரவில் தடை, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலையை உண்டாக்கினாலும் குரு பகவானின் பார்வையால் மாறும். குருவின் பார்வைகள் 2,4,6 ம் இடங்களுக்கு உண்டாவதால் இதுவரையில் உங்களுக்கு இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். 7 ம் இடத்தில் சஞ்சரித்து சங்கடங்களை வழங்கிய சனி பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் வாழ்க்கைத்துணையின் உடல்நிலை சீராகும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். நண்பர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தைரியமாக செயல்படத் தொடங்குவீர். பணவரவு எதிர்பார்த்த அளவில் இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு விலகும். வழக்குகள் சாதகமாகும். ஆரோக்யமாக செயல்படுவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கடந்த கால சங்கடம் விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எந்தவொரு செயலிலும் ஆசைக்கு இடம் கொடுக்காமல் நேர்மையாக செயல்படுவது அவசியம். விவசாயிகளுக்கு விளைச்சலில் கவனம் தேவைப்படும்.சந்திராஷ்டமம்:ஜூலை 25,26.அதிர்ஷ்ட நாள்:ஜூலை 19,28. ஆக. 1,7,10,16.பரிகாரம்: விநாயகரை வழிபட வளமுண்டாகும்.பூரம்: ஒளிபோல் பிரகாசிக்கும் ஆற்றலுடன் பிறந்த உங்களுக்கு ஆடி மாதம் நன்மையான மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மைகளை வழங்கிட இருப்பதால் விருப்பம் நிறைவேறும். வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். ராசிநாதன் விரய ஸ்தானத்திலும், குரு ஜீவன ஸ்தானத்திலும், ராகு அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையாக செயல்படுவது நல்லது. இல்லையெனில் உங்கள் மீது நடவடிக்கைப் பாயலாம் என்றாலும் குருவின் பார்வையால் உங்களுக்குள் எச்சரிக்கை ஒலி ஒலிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். பணவரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலக ஆரம்பிக்கும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். சனி வக்ரம் அடைந்திருப்பதால் நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள முடியும். ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் கேந்திர பலம் பெறுவதால் உங்கள் செயலில் வேகம் இருக்கும். தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். விவசாயம் செழிக்கும். ரியல் எஸ்டேட், கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவதால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையலாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்திராஷ்டமம்:ஜூலை 26,27.அதிர்ஷ்ட நாள்:ஜூலை 19,24,28. ஆக. 6,10,15.பரிகாரம்: வெள்ளி அன்று மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்உத்திரம் 1 ம் பாதம்: நினைத்ததை சாதிக்கும் சக்தி மிக்கவரான உங்களுக்கு, ஆடி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவு ஏற்படும். நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். நேரத்திற்கு உணவு, உறக்கம் என்பது இல்லாமல் போகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். ஒரு சிலருக்கு வேலையில் சங்கடம் ஏற்படும். உங்கள் ஜீவனாதிபதி சுக்கிரனின் சஞ்சாரத்தினால் பொருளாதார நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். தடைப்பட்டிருந்த வேலை நடக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வெளிநாட்டு முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும். குடும்ப, சுக, சத்ரு ஸ்தானங்களுக்கு குருவின் பார்வை உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு சந்தோஷத்தை ஏற்படுத்தும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு இம்மாதம் சுமாராக இருக்கும். ஒரு சிலர் தலைமையின் கண்டிப்பிற்கு ஆளாவீர். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நினைத்ததை நினைத்தபடி நடத்திக் கொள்வீர். கணவன் மனைவிக்குள் இருந்த நெருக்கடி விலகும். புதிய முயற்சிகளில் யோசித்து செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்:ஜூலை 27.அதிர்ஷ்ட நாள்:ஜூலை 19, 28. ஆகஸ்டு 1,10.பரிகாரம்: சூரிய பகவான் வழிபாட்டினால் நன்மை அதிகரிக்கும்.
மாத ராசி பலன்
15-Jul-2024
உத்திரம் 2,3,4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றிடையும் உங்களுக்கு, ஆடி மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதம். உங்கள் நட்சத்திரநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இயங்காமல் நின்றிருந்த இயந்திரம் இயங்கும். தடைப்பட்ட வருமானம் வரும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் விருத்தியாகும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழிலாளர்க்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். குரு ராசியைப் பார்ப்பதால் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்த விருப்பம் நிறைவேறும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பொன் பொருள் சேரும். செயல்களில் வெற்றி உண்டாகும். ராகுவால் நட்பு வட்டம் விரிவடையும். ஒரு சிலர் எதிர்பாலினரின் சூழ்ச்சி வலையில் சிக்க நேரும்.சந்திராஷ்டமம்: ஜூலை. 28.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19,23. ஆக. 1,5,10,14.பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.அஸ்தம்: நினைத்ததை நடத்தி வெற்றிபெறும் உங்களுக்கு, ஆடி மாதம் நன்மையான மாதமாக இருக்கும். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிக்கும் குரு, அவருடைய பார்வையால் தெய்வ அருள் உண்டாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் மாறுதல் ஏற்படும். செய்துவரும் தொழிலின் காரணமாகவும் வெளியூர் வாசம் ஏற்படும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குலதெய்வம், இஷ்ட தெய்வ அருளால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சூரியனால் உங்கள் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும். அரசு வழி முயற்சி நன்மை ஆதாயத்தை வழங்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கைக்கு வரும். மேலோரின் ஆதரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். செய்து வரும் தொழிலில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். தம்பதிகளுக்குள் இருந்த சங்கடம் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். சுக்கிரனின் சஞ்சார நிலைகளால் பொன் பொருள் சேரும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர்.சந்திராஷ்டமம்: ஜூலை. 28,29.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20,23. ஆக. 2,5,11,14.பரிகாரம்: நடராஜரை வழிபட விருப்பம் நிறைவேறும்.சித்திரை 1, 2 ம் பாதம்: தைரியம்,புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றி காணும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாக இருக்கும். கடந்த கால சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சமூகத்தில் தனி அந்தஸ்து உண்டாகும். குருவும் உங்கள் நட்சத்திர நாதன் செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகம் உண்டாவதால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். அரசு அலுவலர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். பிள்ளைகள் முன்னேற்றம் அடைவர். உடல்நிலை சீராகும். உற்சாகமுடன் செயல்படுவீர். அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன் சஞ்சார நிலையும் சாதகமாக இருப்பதால் பல வழியிலும் லாபம் கூடும். தம்பதிகளுக்குள் இணக்கம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் மறையும். சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் நினைத்த செயல் நிறைவேறும். தடைப்பட்ட வருமானம் வரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். கடன்தொல்லை நீங்கும். சட்ட சிக்கல் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்க நீங்கள் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை. 29.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18,23,27. ஆக. 5,9,14.பரிகாரம்: முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
மாத ராசி பலன்
15-Jul-2024
சித்திரை 3, 4 ம் பாதம்: தைரிய வீரியத்துடன் திட்டங்கள் தீட்டி செயல்படுவதில் வல்லவராக இருக்கும் உங்கள் வாழ்வில் வளம்காண்பது இந்த ஆடி மாதம். லாபாதிபதி சூரியனால் தொழில், வியாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஒருசிலருக்கு விரும்பிய இட மாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். குருவின் பார்வை விரய, தன, குடும்ப, சுக ஸ்தானங்களுக்கு உண்டாவதால் சுபச்செலவு அதிகரிக்கும். விற்க முடியாமல் இருந்த இடம் விற்பனையாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். நிம்மதியான உறக்கமும் சந்தோஷமும் ஏற்படும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பணவரவில் ஏற்பட்ட தடை நீங்கும். தாய்வழி உறவுகளால் லாபம் அதிகரிக்கும். சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உடல்நிலையில் ஆரோக்கியம் ஏற்படும். போட்டியாளர் விலகிச் செல்வர். இழுபறி வழக்கு சாதகமாகும். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் நட்சத்திர நாதன் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் எச்சரிக்கை அவசியம். காவல் துறையில் பணிபுரிவர்களுக்கு மேலிடத்தால் நெருக்கடி ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஜூலை 30.அதிர்ஷ்ட நாள்: ஜுலை 18,24,27. ஆக. 6,9,15.பரிகாரம்: கருமாரி அம்மனை வழிபட நன்மை அதிகரிக்கும்சுவாதி: நினைத்தபடியே வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு ஆடி மாதம் எப்படி இருக்கப் போகிறது தெரியுமா? யோகக்காரகனான உங்கள் நட்சத்திரநாதன் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதும், லாபாதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உங்களுக்கு சாதகம். இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடி இனி இல்லாமல் போகும். ஏதேனும் ஒரு வகையில் பாதிப்பை சந்தித்து வந்த உங்கள் உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். நோய் மருத்துவத்திற்கு கட்டுப்படும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி முடிவிற்கு வரும். தடை நீங்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். விற்பனை ஆகாமல் தேங்கியிருந்த பொருட்கள் நல்ல விலைக்கு செல்லும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். நினைத்ததை சாதித்துக் கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சாதகமாக இல்லை என்பதால் செயல்களில் நிதானம் தேவை. தன புத்திரக்காரகனும் ரத்தக்காரகனும் மறைவு பெறுவதால் யோசிக்காமல் சிலவற்றில் ஈடுபட்டு சங்கடங்களுக்கு ஆளாகும் நிலை உண்டாகும். குருவின் பார்வையால் வருமானம் பல வழியிலும் வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகி சந்தோஷமான நிலை ஏற்படும். புதிய இடம், வீடு என ஒரு சிலருக்கு சேரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். உங்கள் முயற்சிக்கு ஏற்றவாறு முன்னேற்றம் காண்பீர்கள். சந்திராஷ்டமம்: ஜூலை 30,31.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 22,24, ஆக. 4,6,13,15.பரிகாரம் துர்கையை வழிபட்டால் துன்பம் தீரும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்: சகல அதிர்ஷ்டத்துடன் வாழும் உங்களுக்கு ஆடி மாதம் உங்கள் முயற்சிக்கேற்ற பலன்களை வழங்கிடும் மாதமாக இருக்கும். ராகு, சூரியன், குருவின் பார்வை என இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நன்மைகளை வழங்கிட இருப்பதால் நீங்கள் நினைத்தது நடந்தேறும். அரசு வழி முயற்சி எளிதாக நடந்தேறும். சட்ட சிக்கல்கள் விலகும். அரசியல்வாதிகள் முயற்சி லாபத்தில் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வம்பு வழக்கு உங்களுக்கு சாதகமாகும். மேலைநாட்டு தொடர்பு லாபத்தை உண்டாக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். விற்பனை உயரும். எதிர்பார்த்த வருமானம் வரும் உங்கள் முதலீடு லாபத்தை ஏற்படுத்தும். திட்டமிட்டு செயல்பட்டு அதன் வழியாக லாபம் காண்பீர். செய்துவரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர். காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும். செலவிற்கேற்ற வருமானம் வரும். விருப்பம் நிறைவேறும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்கள் விருப்பம் பூர்த்தியாகும். அதற்காக எதிர்பார்த்த அனுமதியும் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 31. ஆக. 1.அதிர்ஷ்ட நாள்: ஜுலை 21,24,30. ஆக. 3,12,15.பரிகாரம் : வியாழக்கிழமையில் குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.
மாத ராசி பலன்
15-Jul-2024
விசாகம் 4 ம் பாதம்: தைரியமும் வீரியத்துடன் நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, ஆடி மாதம் யோக மாதமாகும். 12 ஆண்டிற்குப் பிறகு உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடம் காணாமல் போகும். உங்கள் ராசி நாதனும் குருவுடன் இணைந்து குரு மங்கள யோகம் உண்டாகி இருப்பதால் உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த வளர்ச்சியை இப்போது அடைவீர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையை இழந்தவருக்கு மறுமணம் கூடிவரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தேங்கி இருந்த தொழிலில் மாற்றம் ஏற்படும். உற்பத்தியும் லாபமும் அதிகரிக்கும். லாபம் பலவழியிலும் அதிகரிக்கும். உத்தியோகம், தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்போரின் விருப்பம் பூர்த்தியாகும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். எதிர்காலத்திற்குரிய பாதைத்தெரியும். சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரிப்பதுடன் தன் 10 ம் பார்வையால் ராசியையும் பார்த்து உங்கள் உடலில் நலிவினை ஏற்படுத்தி வந்த சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். நீங்கள் ஈடுபடும் செயல்களில் வெற்றி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஆக. 1அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18,21,27,30. ஆக. 3,9,12.பரிகாரம்: ஆலங்குடி குரு பகவானை வழிபட முயற்சி வெற்றியாகும்.அனுஷம்: எதிலும் நீதி நியாயம் பார்த்து விவேகத்துடன் வெற்றி கண்டு வரும் உங்களுக்கு, ஆடி மாதம் நினைப்பது நிறைவேறும் மாதமாக இருக்கும். சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து சங்கடப்பலனை வழங்கி வந்த நட்சத்திர நாதன் சனி வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரையில் இருந்த சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். கனவு நனவாகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்களுக்கு இருந்த தடை விலகும். குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் செல்வாக்கு உயரும். நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் காண்பீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதுடன் குருவின் பார்வையும் அங்கே உண்டாவதால் வருமானம் உயரும். ஆன்மிக வாதிகள் செல்வாக்கு அடைவர். வெளிநாட்டு தொடர்பால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் நிலை உயரும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். விவாகரத்து பெற்றவர்களுக்கும் துணையை இழந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய முயற்சி வெற்றியாகும். நிறைவேற்றாமல் இருந்த வேண்டுதல்களை நிறைவேற்ற குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வருவீர். வித்யாகாரகன் புதன் வக்கிரம் அடைவதால் மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது நல்லது.சந்திராஷ்டமம்: ஆக. 1,2.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17,18,26,27. ஆக.8,9.பரிகாரம்: அனுமனை வழிபட சங்கடம் யாவும் நீங்கும்.கேட்டை: மன உறுதியும், வலிமையும் கொண்ட உங்களுக்கு, ஆடி மாதம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் மாதமாக இருக்கும். ராசிநாதன் செவ்வாயும், குருவும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து சப்தம பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் காலம் இது. உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடம் எல்லாம் விலகுவதுடன் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் தோன்றும். புதிய பாதை தெரியும். தம்பதியரிடையே இருந்த சங்கடம் விலகும். ஒரு சிலருக்கு திருமணம் நடந்தேறும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். நோயில் இருந்து முழுமையாக மீண்டு வருவீர். மாதத்தின் முற்பகுதியில் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் கனவுகள் நனவாகும். பொன் பொருள் சேரும். முயற்சி ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் உங்கள் முயற்சி வெற்றியாகும். திறமை வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். மற்றவர்களால் ஏற்பட்ட நெருக்கடி இல்லாமல் போகும். புத பகவானின் சஞ்சார நிலையும், 5 ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதும் மேற்படிப்பில் சில சங்கடம் ஏற்படுத்தும் என்பதால் இந்த நேரத்தில் மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: ஆக. 2,3.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18,23,27. ஆக. 5,9,14.பரிகாரம்: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட நன்மை உண்டாகும்.
மாத ராசி பலன்
15-Jul-2024
மூலம்: தெய்வீக சிந்தனை கொண்ட உங்களுக்கு, ஆடி மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் கேது, கேந்திர பலம் பெற்று ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில் ராசிநாதன் குருவின் 5 ம் பார்வையும் அங்கே பதிவதால் செய் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதுடன் ஒரு சிலருக்கு புதிய பொறுப்பும் வரும். குரு பகவானின் பார்வை 12 ம் இடத்திற்கு உண்டாவதால் வீடு, இடம் வாங்குவதற்காக செலவு ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். தன, குடும்ப ஸ்தானத்திற்கும் குருவின் பார்வை உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும் செய்துவரும் தொழிலில் லாபம் தோன்றும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் மாதத்தின் பிற்பகுதியில் 6 ம் இடத்தில் குருவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். உடலை வாட்டிக் கொண்டிருக்கும் நோய் விலகும். நம்பிக்கையோடு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். சுக ஸ்தானத்தில் போகக்காரகன் சஞ்சரிப்பதால் மனதில் ஆசை அதிகரிக்கும். தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முயற்சி ஸ்தானாதிபதி வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவதால் தேர்வு நேரத்தில் அது உங்களுக்கு வெற்றியை உண்டாக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 3,4.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21,25,30. ஆக. 7,12.பரிகாரம்: செல்வ கணபதியை வழிபட நன்மை உண்டாகும்.பூராடம்: வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு,ஆடி மாதம் நன்மையான மாதமாக இருக்கப்போகிறது. ருண ரோக சத்ரு ஸ்தானமான 6 ம் இடத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான செவ்வாய், அங்கு சஞ்சரிக்கும் குருவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் குரு மங்கள யோகம் உண்டாகி எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் திறமை அதிகரிக்கும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு குறையும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரனின் சஞ்சார நிலைகளால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். பொன் பொருள் சேரும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். சூரியனால் செயல்களில் தடை, உடல்நிலையில் பின்னடைவு, உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசு வழியில் சில நெருக்கடி ஏற்படும். இந்த சமயத்தில் குருவின் பார்வை உங்கள் நிலையைப் பாதுகாக்கும். குடும்பத்தில் ஒற்றுமை வலுப்பெறும். எதிர்பார்த்த பணவரவை வழங்குவார். செய்துவரும் தொழிலில் லாபத்தை ஏற்படும். பணியிடத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். இக்காலத்தில் எந்த ஒன்றிலும் குழப்பத்திற்கு ஆளாகாமல் செயல்பட்டு நினைத்ததை நினைத்தபடி நடத்துவீர்கள். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: ஆக. 4,5.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21,24,30. ஆக. 3,6,12,15.லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.உத்திராடம் 1 ம் பாதம்: பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, ஆடி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதமாகும். நட்சத்திர நாதன் சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்றிருப்பதால் மேற்கொள்ளும் முயற்சியில் தடையும், தாமதமும், தேவையற்ற பிரச்னையும் உண்டாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலையில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். வியாபாரிகளுக்கு சட்டரீதியாக சில சிக்கல் தோன்றும் என்பதால் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். இந்த நேரத்தில் 6 ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லாவற்றையும் சமாளிக்கும் நிலையும் உண்டாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலம் இழந்து விடுவர். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர் விலகிச் செல்வர். வழக்கு விவகாரம் சாதகமாகும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். தைரியமும் துணிச்சலும் உண்டாகி நினைத்ததை சாதிப்பீர். உங்கள் ராசிநாதன் குருவின் பார்வையால் தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். மறுபக்கம் எதிர்பாராத செலவு உண்டாகும். ஒரு சிலர் புதிய சொத்து, வாகனம் என வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை பலப்படும். வரவு அதிகரிக்கும். எதிர்வரும் செலவுகளை உங்களால் சமாளிக்க முடியும். எத்தனைப் பிரச்னை ஏற்பட்டாலும் அதிலிருந்து உங்களால் விடுபட முடியும். புதிய முயற்சிகளில் மட்டும் கவனமாக இருப்பதுடன், மற்றவரை நம்பி எந்த ஒரு செயலையும் ஒப்படைக்காமல் நீங்களே மேற்கொள்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வரும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: ஆக. 5.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19,21,28,30. ஆக.1,3,10,12.பரிகாரம் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதால் நன்மை உண்டாகும்.
மாத ராசி பலன்
15-Jul-2024
உத்திராடம் 2,3,4 ம் பாதம்: எதையும் வெளிப்படையாகப் பேசி வாழும் உங்களுக்கு, ஆடி மாதம் யோகமான மாதமாக இருக்கும். தன ஸ்தானத்தில் பாத சனியாக சஞ்சரித்த உங்கள் ராசிநாதன் வக்கிரம் அடைந்திருப்பதால் குடும்பத்திலிருந்த சங்கடம் விலகும். பண வரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய நிலை உண்டாகும். குரு பகவானால் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதுவரை உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். குலதெய்வ அருள் ஏற்படும். தொழில், வியாபாரம் லாபம் அடையும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணியில் இருப்பவரின் கோரிக்கை நிறைவேறும். புதிய தொழில் தொடங்க, வெளிநாடு செல்ல எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். முயற்சி இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் செயல் யாவும் வெற்றியாகும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை இக்காலத்தில் அடைவீர். வெளிநாட்டு முயற்சி லாபதை ஏற்படுத்தும். திருமண வயதினருக்கு வரன் வரும். பாக்ய ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் தெய்வ வேண்டுதலை நிறைவேற்றுவீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வரவேண்டிய பணம் வரும். பெரியோர் ஆதரவு உண்டாகி நினைத்ததை சாதிக்கும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி, பொறுப்பு என்று நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 6.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17,19,26,28. ஆக. 8,10.பரிகாரம்: நெல்லையப்பரை வழிபட நன்மை அதிகரிக்கும்.திருவோணம்: பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, ஆடி மாதம் முயற்சியால் முன்னேற்றம் காணும் மாதமாக இருக்கும். யோகக்காரகன் ராகு, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்குவார். தைரியமாக செயல்பட வைத்து, மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளை முடிக்க வைப்பார். உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பார். நினைத்துப்பார்க்க முடியாத இடத்திற்கு உங்களை உயர்த்துவார். வெளிநாட்டு முயற்சிகளை வெற்றியாக்குவார். ஒரு சிலருக்கு அடிக்கடி விமான பயணத்தை ஏற்படுத்துவார். குரு பகவான் உங்கள் கனவுகளை நனவாக்குவார்.வெளியிட செல்வாக்கை பன்மடங்காக உயர்த்துவார். பட்டம் பதவி புகழ் உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலை நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு ஊர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பணம் பல வழிகளிலும் வரும். கடன் அடைபடும். அருகிலுள்ள கோயில்களில் நீங்களே முன் நின்று திருப்பணிகளை நடத்துவீர். தொழில், வியாபாரம் விருத்தியாகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஒரு சிலர் மேற்கல்விக்காக வெளிநாடு, வெளி மாநிலம் என செல்வார்கள்.சந்திராஷ்டமம்: ஆக. 6,7.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17,20,26,29. ஆக. 2,8,11.பரிகாரம் காஞ்சி காமாட்சி அம்மனை வழிபட வளமுண்டாகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்: உண்மையை உணர்ந்து வாழ்கின்ற உங்களுக்கு, ஆடி மாதம் முயற்சியின் அளவிற்கு முன்னேற்றம் காணும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் 5 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகளில் வேகம் இருக்கும் என்றாலும் நிதானித்து செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்துகளில் சில பிரச்னை தோன்றும். அதில் அவசரப்பட வேண்டாம். குருபகவான் அங்கே இணைந்திருப்பதால் எல்லாம் நன்மையில் முடியும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் பிரச்னை காணாமல் போகும். தடைகளை எல்லாம் தாண்டி நினைத்ததை சாதிக்க முடியும். வாழ்க்கையில் இருந்த நெருக்கடி, உடல் நிலையில் உண்டான பாதிப்பு முழுமையாக விலகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வரும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு நல்ல தகவல் வரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். புதிய சொத்து சேரும். கோயில் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர். மாணவர்களின் மேற்படிப்பு கனவு நனவாகும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னை விலகும். விஐபிகள் ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் நினைப்பதை நினைத்தபடி செய்து கொள்வீர். எல்லா வகையிலும் உங்கள் செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.சந்திராஷ்டமம்: ஆக. 7.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17,18,26,27. ஆக. 8, 9.பரிகாரம் நரசிம்மரை வழிபடுவதால் நன்மை உண்டாகும்.
மாத ராசி பலன்
15-Jul-2024
அவிட்டம் 3,4 ம் பாதம்: சாமர்த்தியமாக சூழலுக்கு ஏற்றவாறு செயல்படும் உங்களுக்கு, ஆடி மாதம் நன்மையான மாதம். உங்கள் ராசிக்குள் சஞ்சரித்துவரும் சனி வக்கிரமடைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். குழப்பம் மறையும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட சிக்கல் நீங்கி லாபமடையும். தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சீராகும். குரு பகவான் பார்வை ஆயுள் ஸ்தானத்தில் பதிவதால் உங்களை பயமுறுத்திக் கொண்டிருந்த நோய் விலகும். 7 ம் பார்வையாகவும் பதிவதால் நீங்கள் செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதிக்குரிய வேலை அமையும். புதிய இடம், வாகனம், நகை வாங்குவது என செலவு அதிகரிக்கும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சர்ப்ப கிரகம் சஞ்சரிப்பதால் உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் வார்த்தைகளில் நிதானம் அவசியம். நியாயமான வரவு மட்டுமே உங்களிடம் தங்கும். முறைகேடான சம்பாத்தியம் உங்கள் வாழ்க்கையை முடக்கும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். 5 ம் அதிபதி, வித்யாகாரகன் புதன் வக்கிரம் அடைவதால் மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: ஆக. 8.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17,18,25,27. ஆக. 9.பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட குறை அனைத்தும் விலகும்.சதயம்: நடப்பதெல்லாம் கர்ம வினை என்பதை உணர்ந்து, நிதானமாக செயல்படும் உங்களுக்கு, ஆடி மாதம் அதிர்ஷ்டகரமான மாதம். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேதுவால் துன்பங்களுக்கு ஆளாகி வரும் உங்களுக்கு குருவின் பார்வை மாற்றத்தை உண்டாக்கும். உங்கள் திறமை வெளிப்படும். தொழில் ஸ்தானத்திற்கும் குருவின் பார்வை உண்டாவதால் தொழிலில் இருந்த தடை விலகி முன்னேற்றம் உண்டாகும். இந்த நிலையில் ராஜ கிரகமான சூரியன் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலை மேம்படும். நீண்டகால பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படும். வரவேண்டிய பணம் வரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். வழக்கு விவகாரம் சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகள் காணாமல் போவார். இம்மாதம் எல்லாவற்றிலும் நன்மை அதிகரிக்கும். ஜென்மராசிக்குள் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரமடைந்திருப்பதால் நெருக்கடி குறையும். வாழ்க்கைத் துணைக்கு ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்கள் செல்வாக்கை மறைக்க நினைத்தவரின் செயல் பலிக்காமல் போகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். கூட்டுத்தொழில் இனி லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது.சந்திராஷ்டமம்: ஆக.8,9.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 22, 26, ஆக. 4,13.பரிகாரம்: இசக்கியம்மனை வழிபட வாழ்க்கை வளமாகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: அறிவாற்றலால் வெற்றி பெரும் உங்களுக்கு, ஆடி மாதம் நன்மையான மாதம். ராகு, கேது, குரு, செவ்வாய் கிரகங்கள் நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்தாலும், சூரியன் உங்கள் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்துவார். இக்காலத்தில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். நினைப்பதெல்லாம் நடக்கும். உடல்நிலையை சங்கடப்படுத்திக் கொண்டிருந்த நோய் விலகும். உற்சாகமுடன் செயல்படுவீர். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் உற்பத்தி உயரும். விற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றில் உண்டான தடை விலகும். வழக்கு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தைரியமாக செயல்படத் தொடங்குவீர். குருவின் பார்வை அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானத்திற்கு உண்டாவதால் செல்வாக்கு வெளிப்படும். புதிய சொத்து, வாகனம் என்ற விருப்பம் நிறைவேறும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அரசு வழியிலான முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். அரசியல் வாதிகளுக்கு புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். விவசாயிகள் எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. படிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்பவர்கள் அங்குள்ள நிலையை நன்றாக அறிந்து கொண்டு செல்வது நல்லது.சந்திராஷ்டமம்: ஆக. 10.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17,21,26, 30. ஆக. 3,8,12.பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
மாத ராசி பலன்
15-Jul-2024
பூரட்டாதி 4 ம் பாதம்: தெளிந்த ஞானம் கொண்ட உங்களுக்கு ஆடி மாதம் முயற்சிகளால் முன்னேற்றம் காணும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதனின் சஞ்சார நிலை சாதகமாக இல்லை என்றாலும் அவருடைய பார்வை சப்தம, பாக்ய, இலாப ஸ்தானங்களில் உண்டாவது யோகம். மனதில் சங்கடம். குடும்பத்தில் குழப்பம். நட்புகளால் சோதனை என்றிருந்த நிலை யாவும் மாறும். பெரிய அளவில் முதலீடு செய்தும் எதிர்பார்த்த வருவாய் வரவில்லையே என வருந்துபவர்களின் நிலை மாறும். வரவேண்டிய பதவி உயர்வு வரவில்லை, கிடைக்க வேண்டிய இடமாற்றம் கிடைக்கவில்லை என்பவருக்கு மாற்றம் கிடைக்கும். வாழ்வில் எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை, தெய்வம் நமக்கு கண் திறக்கவில்லை என வருந்துபவர்களுக்கு குலதெய்வ அருளும் இஷ்ட தெய்வ அனுக்கிரகமும் இப்போது உண்டாகும். கோயில் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர். உங்கள் மனதில் புதிய உற்சாகம் தோன்றும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவர். எதிர்பார்த்த பணம் வரும். கடன் அடையும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விரயஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்கிரம் அடைந்திருப்பதால் செலவு கட்டுக்குள் வரும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மூன்றாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி யாவும் வெற்றியாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடம் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 10.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21,30. ஆக. 3,12.பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரட்டாதி: திடமான சிந்தனையுடன் முன்னேற்றம் கண்டுவரும் உங்களுக்கு, ஆடி மாதம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் மாதமாக இருக்கும். விரய ஸ்தானத்தில் ஏழரை சனியாக சஞ்சரித்து வரும் உங்கள் நட்சத்திரநாதன் வக்கிரமடைந்திருப்பதால் விரயச்செலவு கட்டுப்படும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். இனி நிம்மதி அடைவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதனுடன் தனாதிபதியும் பாக்யாதிபதியுமான செவ்வாயும் இணைந்து சஞ்சரிப்பதால் குரு மங்கள யோகம் உண்டாகி கனவுகளை நனவாக்குவர். பல முயற்சிகளை மேற்கொண்டும் நிறைவேறாமல் போன வேலை இனி விறுவிறுவென நடந்தேறும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக பூர்த்தியாகும்.கோயில் வழிபாட்டிலும், குல தெய்வ வழிபாட்டிலும் மனம் செல்லும். குடும்பத்தில் இருந்த பிரச்னை, சங்கடம் விலகும். விலகிச்சென்றவர் மீண்டும் உங்களைத்தேடி வருவர். திருமண வயதினருக்கு வரன் வரும். மறுமணம் முயற்சி மேற்கொண்டோருக்கு விருப்பப்பட்ட துணை அமையும். தடைப்பட்டிருந்த பணம் இப்போது வரும். பெரியோரின் ஆசீர்வாதம் உண்டாகும். 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் நீங்கள் நினைத்ததை சாதித்துக்கொள்ளும் நிலை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு வருவாய் உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். ஒருசிலர் கல்விக்காக வெளிநாடு, வெளி மாநிலம் என செல்வீர்கள்.சந்திராஷ்டமம்: ஆக. 10,11.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17,21,26,30. ஆக. 3,8,12.பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டால் முயற்சி வெற்றியாகும்.ரேவதி: படிப்பறிவும் பட்டறிவும் கொண்ட உங்களுக்கு ஆடி மாதம் நினைப்பது நிறைவேறும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் புதன் வக்கிரமடைந்தாலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் திட்டமிட்டு செயல்படுவீர். நீங்கள் ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். இதுவரை உண்டான படிப்பினைகளை வைத்து முன்னேற்றத்திற்கு வழி காண்பீர். பண வரவு அதிகரிக்கும். பொன்னும் பொருளும் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும். குலதெய்வ வழிபாட்டால் குறை தீரும். இந்த நேரத்தில் உங்கள் ராசிநாதன் குருவின் பார்வைகளால் திருமண வயதினருக்கு வரன்வரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். டைவர்ஸ் வரையில் சென்றவர்கள் மனம் மாறுவர். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். பெரியோரின் ஆதரவு சங்கடங்களைப் போக்கும். 11 ம் இடத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் நட்புகளால் உங்கள் விருப்பம் நிறைவேறும். ஒரு சிலர் மறுமணத்திற்குரிய முயற்சியை மேற்கொள்வீர். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். நியாயமான செயல்களில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்கிரம் அடைந்திருப்பதால் செலவு கட்டுப்படும். காணாமல் போன பொருள் கைக்கு வரும். பண நெருக்கடி விலகும். முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் செயல்கள் வெற்றியாகும். காவல்துறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள் நிலை உயரும். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் கனவு நனவாகும். படிப்பில் கவனம் செல்லும்.சந்திராஷ்டமம்: ஆக. 11,12.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21,23,30. ஆக. 3,5,14.பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.
மாத ராசி பலன்
15-Jul-2024