Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/குருபெயர்ச்சி பலன்கள்/மீனம்

குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

குருப்பெயர்ச்சி பலன்கள் : மீனம்
19 அக் 2019 to 30 அக் 2020

முந்தைய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

மீனம்குருபகவான்  இப்போது 10ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான நிலை எனச் சொல்ல முடியாது.  பொதுவாக 10ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டம், மனசஞ்சலம் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. அதன் மூலம் குறையனைத்தும் தீரும். எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். மேலும் அவர் 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அதிசாரம் பெற்று மகர ராசியில் இருக்கிறார். இந்த காலகட்டத்தில் அவரால் நன்மை கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். மேலும் அவரின் பார்வைகள் மூலமும் நற்பலன் கிடைக்கும்.    

முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமான நிலையில் இல்லை. அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் குருவின் 5ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. அதன் மூலம் மனதில் துணிச்சல் பிறக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை  உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். சமூகத்தில் மதிப்பு உயரும். உங்கள் ஆற்றல் மேம்படும். மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.

கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். வீடு, மனை வாங்கும் எண்ணம் கைகூடும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும்.  

வியாபாரிகள் வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிரிகள் தவிடுபொடி ஆவர். புதிய தொழில் தொடங்க வாய்ப்புண்டு. 2020 ஆக.31 முதல் ராகு காரிய அனுகூலம், பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தியை தருவார்.

பணியாளர்களுக்கு வேலையில் கவனம் தேவை. சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்கள் விழிப்புடன் செயல்படவும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அனுகூலமான காலகட்டம். வேலையில் திறமை பளிச்சிடும். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். மேலதிகாரிகளின் ஆதரவும், சகஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். 2020 ஆகஸ்ட் 31 முதல் போலீஸ், ராணுவம், பாதுகாப்பு தொடர்பான பணியில் இருப்பவர்கள் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம்.  

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலன் பெற முடியாது. 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7  வரை கலைஞர்களுக்கு விருது, பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் புதிய பதவி கிடைக்கப் பெறுவர்.  2020 ஆகஸ்ட் 31 முதல் கேதுவால்  தடைகள் குறுக்கிடலாம். பண விரயம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு மனதில் தளர்ச்சி ஏற்படும். குருவின் பார்வையால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியரின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். தேர்வில் அதிக  மதிப்பெண்  கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு சீரான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை நன்மையை எதிர்பார்க்கலாம்.  

பெண்களுக்கு குடும்பத்தில் பொறுமையும், நிதானமும் தேவை. வெளியூரில் தங்கும் கட்டாயம் உருவாகும். குருவின் பார்வையால் தேவையான பொருட்களை வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். 2020 மார்ச் 28 முதல் 2020 ஜூலை 7 வரை திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு  பதவி உயர்வு கிடைக்கும். தோழிகள்  ஆதரவுடன் செயல்படுவர். 2020 ஆகஸ்ட் 31 முதல் ராகுவால் பொன், பொருள் சேரும். மனதில் ஆனந்தம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். கேதுவால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு கவனம்.

பரிகாரம்:
*  வியாழனன்று குருபகவானுக்கு அர்ச்சனை
*  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்
*  சுவாதியன்று நரசிம்மருக்கு துளசி மாலை    

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் குருப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap