Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/குருபெயர்ச்சி பலன்கள்/தனுசு

குருபெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

குருப்பெயர்ச்சி பலன்கள் : தனுசு
19 ஆக 2017 to 11 செப் 2018

முந்தைய குருபெயர்ச்சி பலன்கள்

rasi

தனுசுதொழிலை தெய்வமாக கருதும் தனுசு ராசி அன்பர்களே!

குரு பகவான் 11-ம் இடமான துலாம் ராசிக்கு வருகிறார். இதனால் வருமானத்தை அள்ளித் தந்து வளம் காண செய்வார். அவரின் 7 மற்றும் 9-ம் இடத்து பார்வை சிறப்பாக
இருப்பதால் நன்மை அதிகரிக்கும்.  2018 பிப்.14-ல் 12-ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறிய பின், நன்மை குறையும்.  குடும்பத்தை விட்டு வெளியூர் செல்ல நேரிடலாம். வீண் அலைச்சல் ஏற்படலாம்.

ராகு 8-ம் இடமான கடகத்தில் இருப்பதால் உறவினர் வகையில் பிரச்னை உருவாகலாம். கேது ராசிக்கு 2-ம் இடமான மகரத்தில் இருப்பதால் அரசு  வகையில் பிரச்னை ஏற்படலாம்.

சனிபகவான் 12-ம் இடத்தில் இருப்பதால் எதிரி தொல்லை குறுக்கிடலாம். ஆனால் அவரின் 7-ம் இடத்து பார்வை மூலம் நன்மை உண்டாகும். 2017 டிச.19-ல் சனி, உங்கள் ராசிக்கு மாறுவதால் உடல் நலம் பாதிக்கப்படலாம்.

இனி காலவாரியாக விரிவான பலனை காணலாம். 2017 செப்டம்பர் – 2018 ஜனவரி
குரு சிறப்பாக இருப்பதால்,  தடைகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள்.  பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.  புதிய வீடு, வாகனம் வாங்கலாம். வசதியான வீட்டுக்கு குடியேற வாய்ப்புண்டு. ஆடை, ஆபரணம் சேரும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில்  சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். வாடிக்கையாளர் ஆதரவு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வெளியூர் பயணம் சென்று ஆதாயத்துடன் திரும்புவீர்கள். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது.

பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.

கலைஞர்களுக்கு எதிரி தொல்லை, அவப்பெயர்,போட்டி முதலியன மறையும்.
எதிர்பார்த்த புகழ் வந்து சேரும். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு இல்லாமல் பாடுபட வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் கல்வியில்  வளர்ச்சி காண்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவர். ஆசிரியரின் வழிகாட்டுதல் கைகொடுக்கும். விவசாயிகளுக்கு நெல், கோதுமை,
கொண்டைக்கடலை, கேழ்வரகு போன்றவை மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். இருப்பினும்  வழக்கு,  விவகாரங்களில் மெத்தன போக்கு வேண்டாம்.

பெண்களிடம் அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு  புதிய பதவி தேடி வரும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.

2018  பிப்ரவரி – செப்டம்பர் ராகுவால் உறவினர் வகையில்  பிரச்னை உருவாகலாம்.
குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போகவும்.  

ஏப். 9- முதல் அக்.3- வரை  குருவால் நன்மை அதிகரிக்கும். எதிர்பார்ப்பு  நிறைவேறும்.
தொழில், வியாபாரத்தில் அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு-, செலவு கணக்கை சரியாக வைத்து கொள்ளவும்.  ஏப்.9க்குப் பிறகு நிலைமை சீராகும். லாபம் அதிகரிக்கும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை உண்டாகும்.  அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிரத்தை எடுத்தால்  மட்டுமே கோரிக்கை நிறைவேறும். குரு பகவான் ஏப்.9- முதல் அக்.3 வரை  துலாம் ராசியில் இருப்பதால்  சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் போதிய வருமானம் காண்பர்.  அரசியல்வாதிகள் பலன் கருதாமல் உழைக்க வேண்டியிருக்கும். தொண்டர்களின் ஆதரவு ஓரளவு கிடைக்கும்.

மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஏப்.9க்கு  பிறகு போட்டிகளில் வெற்றி காணலாம்.  விவசாயிகள் மானாவாரி பயிர்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்க பெறுவர். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த வருமானம் வரும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. ஏப்.9க்கு பிறகு தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  தடைபட்ட திருமணம் நடந்தேறும்.

பரிகாரம்
* ஞாயிறு ராகு காலத்தில் பைரவர் வழிபாடு
* சதுர்த்தி திதியன்று விநாயகருக்கு அர்ச்சனை
* திங்கட்கிழமையில் சிவனுக்கு நெய் தீபம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் குருப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap