sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

கன்னி

/

கன்னி

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

மாத ராசி பலன் : கன்னி
12 ஜன 2024

முந்தய மாத ராசி பலன்

rasi

கன்னிஉத்திரம் 2,3,4 ம் பாதம் : வித்யாகாரகனான புதன், ஆத்மகாரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு அறிவாற்றல் என்பது நீங்கள் பெற்ற வரமாகும். இந்த மாத முற்பகுதியில் உங்கள் ராசிநாதன் சாதகமான பலன்களை உங்களுக்கு வழங்குவார். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். பின் விளைவுகள்பற்றி யோசிப்பீர்கள். 6ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனிபகவான் இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்களை எல்லாம் விலக்கி வைப்பார். உடல்நிலையில் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவார். பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவார். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். 7ம் இடத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் சங்கடங்கள் தோன்றுவதற்கு வாய்ப்புண்டு. நட்புகளிடமும், வாழ்க்கைத் துணையிடமும் பிரச்னை உருவாகும் என்பதால் எச்சரிக்கை அவசியம். குருபகவானின் பார்வை உங்கள் குடும்ப ஸ்தானத்திற்கு பதிவதால் ஜென்ம கேதுவால் உண்டாகும். பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். விரயங்கள் சுப விரயங்களாக மாறும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள். பணியில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். அதிக ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் வாழ்பவர்களுக்கு எந்த விதமான சங்கடங்களும் ஏற்படாமல் போகும். பெண்களின் முயற்சி இழுபறியாகும் வாழ்க்கைத்துணையுடன் பிரச்னைகள் தோன்றும் என்பதால் வார்த்தைகளில் கவனம் அவசியம். பணிபுரியும் இடத்தில் யாரிடமும் பேச்சில் கூட நெருக்கம் காட்ட வேண்டாம். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகி ஆரோக்கியமாக செயல்படுவீர்கள். ஆனாலும் மனதில் ஏதேனும் குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவதால் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜன.16.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 19,23,28. பிப்.1,5,10.
பரிகாரம்: நெல்லையப்பரை வழிபட நினைத்தது நிறைவேறும்.

அஸ்தம்: மனம், மகிழ்ச்சி, புகழுக்கெல்லாம் காரகனான சந்திரன், கல்விக்கும் அறிவுக்கும் காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எந்தவொரு செயலையும் சாமர்த்தியமாக செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். அதன் காரணமாக சங்கடங்கள் பற்றியும் அதிக அளவில் கவலைப்பட மாட்டீர்கள். சந்தோஷ நிலையிலும் அதை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டீர்கள். இந்த மாதத்தில் உங்கள் ஜென்ம ராசிக்குள் கேது பகவான் சஞ்சரித்து குழப்பத்தை அதிகரித்தாலும், குரு பகவானின் பார்வைகள் சாதக பலன்களை ஏற்படுத்தும். குடும்பம், சுகம் போன்றவற்றில் எதிர்பார்ப்பு நிறைவேறும். விரயச் செலவு அதிகரிக்கும் என்றாலும் சத்ரு ஸ்தான சனிபகவான், இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடங்களை எல்லாம் ஒவ்வொன்றாக தீர்த்து வைப்பார். உடல் நிலை பாதிப்புகள் விலக ஆரம்பிக்கும். வியாபாரம், தொழில், பணி போன்றவற்றில் இருந்த எதிர்நிலை மாறும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். ஆற்றல் வெளிப்படும். அரசியல் வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை சாதிக்கும் நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும் என்றாலும் அதனால் சங்கடம் ஏற்பட வாய்ப்புண்டு. எந்த ஒன்றிலும் பின் விளைவு பற்றி தெரிந்து கொண்டு செயல்படுவது நன்மையாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பெண்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். இருந்தாலும் புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
சந்திராஷ்டமம்: ஜன. 17.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 20,23,29, பிப். 2,5,11.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

சித்திரை 1, 2 ம் பாதம் : ரத்தக்காரகன், யுத்தக்காரகன், பராக்ரமக் காரகனான செவ்வாய், வித்யா காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு நினைத்ததை சாதிக்கும் வல்லமை இருக்கும். எதையும் சாதுரியமாக செய்வீர்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உங்கள் வாழ்வில் உண்மையாகும்.  இதுவரையில் சங்கடத்தை அடைந்த உங்களுக்கு 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி நன்மைகளை வழங்குவார். முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவார். தடைகளை போக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். குடும்பாதிபதியும் பாக்யாதிபதியுமான சுக்கிரன் பொன், பொருள் சேர்க்கை உண்டாக்குவார். புதபகவானின் சஞ்சார நிலைகள் உங்கள் செயல்பாடுகளில் வெற்றியை உண்டாக்கும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகி அவர்களால் ஆதாயம் ஏற்படும் என்றாலும் சங்கடங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. அஷ்டம ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரித்தாலும் அவரின் பார்வைகள் மேம்பாட்டை உண்டாக்கும். பணவரவிற்கு வழிவகுக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை உண்டாக்கும். குடும்பத்தில் சந்தோஷத்தை அதிகரிக்கும். புதிய இடம், வாகனம் வாங்குவது போன்ற முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்குள் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்துக்கொண்டு செல்வீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். மற்றவர்களின் ஆலோசனைகள் உங்களை திசைதிருப்பும் என்பதால் சுயமாக சிந்தித்து செயல்படுவதால் சங்கடங்களிலிருந்து விடுபட முடியும். குடும்பத்தில் நிம்மதியைக் காணமுடியும். பணியில் இருந்த பிரச்னைகளில் இருந்து வெளியில்
வரமுடியும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செல்லும்.
சந்திராஷ்டமம்: ஜன. 17,18.
அதிர்ஷ்ட நாள்: ஜன. 23,27. பிப். 5,9.
பரிகாரம்: வராகியமமனையை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us