sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

மாத ராசி பலன்

/

மீனம்

/

மீனம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

மாத ராசி பலன் : மீனம்
13 மார் 2025

முந்தய மாத ராசி பலன்

rasi

மீனம்

மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்; வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ராசிக்குள் சூரியன், ராகு, புதன், சுக்கிரன் என்று சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும். விரய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில்  சுமூகமான நிலை இல்லாமல் போகும். சுக ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வியாபாரத்திலும் தொழிலிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அரசு பணியில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளால் நெருக்கடி உண்டாகும். வழக்குகள் வராமல் பார்த்துக் கொள்ளவும். குரு, சுக்கிரன் பரிவர்த்தனையால் சங்கடம் ஏற்பட்டாலும் அவற்றில் இருந்து உங்களால் வெளிவர முடியும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். பெரிய மனிதர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த பணம் வரும். திடீர் செலவுகளை சமாளிக்க முடியும். அரசியல்வாதிகள் அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். அதனால் தேவையற்ற பிரச்னை உருவெடுக்கும். மாணவர்கள் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிறு வியாபாரிகள் முதலீட்டில் கவனமாக இருப்பதுடன் வருமானத்தின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 17. ஏப். 13.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21, 30. ஏப். 3, 12.
பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.

உத்திரட்டாதி; எதிலும் தனித்துவத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் போராடி வெற்றிபெற வேண்டிய மாதம். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் பல வகையிலும் செலவுகளை அதிகரிப்பார். குடும்பத்திலும் சிறு சிறு பிரச்னை தோன்றி மறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருவோருக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு குறையும். தொழிலாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போகும். மனம் குழப்பத்திற்கு ஆளாகும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உங்கள் தனாதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பதற்கு மாறான பலன் ஏற்படும். தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி எந்த ஒரு வேலையிலும் இறங்கிட வேண்டாம். செய்து வரும் தொழிலில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும், முதலீடுகளில் கவனமாக இருப்பதும் நல்லது. ராசிநாதனின் பார்வை சாதகமாக இருப்பதால் திருமண வயதினருக்கு வரன் வரும். வீடு, இடம் வாங்க வேண்டும் என்ற கனவு நனவாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். எத்தனைப் பிரச்னை வந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும். செலவிற்கேற்ற வரவும் இருக்கும். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது. வயதானவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: மார்ச் 17, 18. ஏப். 13.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21, 26, 30. ஏப். 3, 8, 12.
பரிகாரம் நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானை வழிபட நன்மை உண்டாகும்.

ரேவதி; வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் நெருக்கடியான மாதம். புத பகவானின் சஞ்சாரமும், ராசி நாதன் குரு பகவானின் சஞ்சாரமும் சாதகமாக இல்லை ஆதலால் ஒவ்வொரு வேலையிலும் கவனம் வேண்டும். வியாபாரத்திலும், தொழிலிலும் ஒப்பந்தம் செய்கின்றபோது நன்றாகப் படித்துப்பார்த்து கையெழுத்திட வேண்டும். அரசு பணியில் இருப்பவர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி செயல்படுவதால் உங்களுக்கு வரும் சங்கடம் மாற்றம் பெறும். குரு பகவானின் பார்வை உண்டாவதால் வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். தவறான நண்பர்களால் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். 9, 11 ம் இடங்களுக்கும் குரு பகவானின் பார்வைகள் கிடைப்பதால் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். புதிய வீடு, நிலம் வாங்கவேண்டும் என்ற நீண்டநாள் கனவு நனவாகும். முந்தைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும் என்றாலும், உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பிரச்னைகளும் வழக்குகளும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பின் விளைவுகளை யோசித்து அனைத்திலும் அனுசரித்துச் செல்வது நல்லது. மூத்த குடிமக்களுக்கு உடல்நிலையில் சங்கடம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவரை சந்திப்பது அவசியம். மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதும், படிப்பில் கவனமாக இருப்பதும் நல்லது.
சந்திராஷ்டமம்: மார்ச் 18, 19.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21, 23, 30. ஏப். 3, 5, 12.
பரிகாரம்: கள்ளழகரை வழிபட நினைப்பது நடந்தேறும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us