Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/மேஷம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

மாத ராசி பலன் : மேஷம்
13 மே 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

மேஷம்

மேஷம்

அசுவினி: எது நடந்தாலும் அது நன்மைக்கே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். வருமானம் அதிகரிக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் உதவியால் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைய முடியும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், மனம் சலனப்படும். எந்தவொரு வேலையிலும் நிலையான ஈடுபாடு இல்லாமல் போகும் என்பதால், கவனமாக செயல்படுவது அவசியம். பிள்ளைகளின் போக்கு இந்த நேரத்தில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். அவர்கள் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வதும் பாதுகாப்பதும் மிகமிக அவசியம். பூர்வீக சொத்துகளில் சில பிரச்னை ஏற்படும். அதைப் பேசி தீர்த்துக்கொள்ள முடியும்.  ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் செவ்வாயால் கோபம் அதிகரிக்கும்.  கவனமும் நிதானமும் இருப்பதால் நன்மை தரும். மே 26 வரை சப்தம ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். நண்பர்கள் உங்கள் மனம் அறிந்து நடந்து கொள்வார். விவசாயிகள் இந்த நேரத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மே 30, 31.
அதிர்ஷ்ட நாள்: மே 16, 18, 25, 27. ஜூன் 7, 9.
பரிகாரம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.

பரணி: நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். ராசிநாதன் செவ்வாய் ராசிக்குள் ஆட்சியாக சஞ்சரிக்கும் நிலையில், அதிர்ஷ்டககாரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். உங்கள் திறமை வெளிப்படும். வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி ஆதாயமாகும். உங்களுக்கு இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். பொன் பொருள் சேரும். பண வரவு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கு மே 26 முதல் குரு பார்வை உண்டாவதால் ஏழரைச்சனியின் சங்கடம் விலகும். விரயங்கள் கட்டுப்படும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். சிலருக்கு எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும். மே 27 வரை புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த பணம் வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். லாப ராகுவால் தடையின்றி வருமானம் வரும். கடன் தொல்லை விலகும். விவசாயிகள் இந்த மாதத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு உயர் கல்வி கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: மே 31. ஜூன் 1.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 18, 24, 27. ஜூன் 6, 9.
பரிகாரம்: அருணாச்சலேஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.

கார்த்திகை 1ம் பாதம்: எங்கும் எதிலும் முதலிடத்தில் இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஆத்ம காரகன் சூரியன் குடும்ப ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் மனம் சஞ்சலப்படும். வார்த்தைகளில் நெருப்பு பறக்கும். யோசிக்காமல் பேசி சில இடங்களில் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மே 26 வரை குருவின் பார்வை 7,9,11 ம் இடங்களுக்கும், அதன்பிறகு 8,10,12 ம் இடங்களுக்கும் கிடைப்பதால் திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். வாழ்க்கைத்துணையைப் பிரிந்தவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் மறுமணம் நடக்கும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். கனவு நனவாகும். மறைந்த செல்வாக்கு வெளிப்படும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். வீண் செலவு கட்டுப்படும். வாழ்வில் நிம்மதியான நிலை உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் கனவு நனவாகும். விவசாயிகள் நிதானமாக செயல்படுவது நல்லது. பெண்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 1.
அதிர்ஷ்ட நாள்: மே 18, 19, 27, 28. ஜூன் 9, 10.
பரிகாரம்
அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap