Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/விருச்சிகம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

மாத ராசி பலன் : விருச்சிகம்
10 ஏப் 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

விருச்சிகம்

விருச்சிகம்

விசாகம் 4 ம் பாதம்
சூழ்நிலைகளை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் ஏற்படும். தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டு அதனால் சங்கடங்கள் அடையவேண்டிய நிலை உருவாகும் என்றாலும், அவருடைய பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால், விரய செலவுகள் கட்டுப்படும். வெளியூர் பயணங்கள் வழியாக ஆதாயம் ஏற்படும். நிம்மதியான துாக்கம் இருக்கும்.  குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். மனதில் இருந்த குழப்பம் விலகும். சந்தோஷமான நிலை இருக்கும். சுக ஸ்தானத்திற்கு குரு பகவான் பார்வை இருப்பதால் தாய்வழி உறவுகளின் ஆதரவு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பொருளாதார நிலை உயரும். செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். தொழிலை விரிவு செய்ய எதிர்பார்த்த பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். பெண்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குழந்தைகள், குடும்பத்தின் நலனிலும் அக்கறை அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படும் என்றாலும் அனைத்திலும் திட்டமிட்டு செயல்படுவதும் நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பதும் நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: ஏப். 21.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.18, 27, 30. மே 3, 9, 12.

பரிகாரம்: மாரியம்மனை வழிபட எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.

அனுஷம்
கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், சப்தம, லாப, குடும்ப ஸ்தானங்களைப் பார்ப்பதால், கூட்டுத்தொழிலில் கூடுதல் கவனம் தேவை. கூட்டாளியிடம் கணக்கு கேட்கப்போய் அதனால் நட்பில் விரிசலும் ஏற்படலாம். புதியவர்களை நம்பி சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடங்களுக்கு ஆளாகலாம். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மையை உண்டாக்கும். முடிந்தவரை தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வதால் சங்கடங்கள் விலகும். இளம் பெண்கள் இந்த நேரத்தில் எதிர்பாலினர் நட்பில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சுயதொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம்வரும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் நடந்தேறும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் ஏற்படும். முடங்கிக்கிடந்த தொழில்கள் மீண்டும் முன்னேற்றம் அடையும். வெளியில் நின்று போன பணம் கைக்குவரும். சனிப்பார்வை ராசியை விட்டு விலகி விட்டதால் பணியாளர்களுக்கு உடல்நிலையும் மனநிலையும் சீராகும். மே 10 முதல் ராசிநாதன் செவ்வாய் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களிடம் ஒரு அசாத்தியமான துணிச்சல் ஏற்படும். தைரியம் கூடும். எடுத்த வேலைகளை முடிக்க முடியும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்ற நிலையெல்லாம் முடிவிற்குவரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வார்த்தைகளில் தெளிவு இருக்கும். எதிர்பார்த்த பணம்வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு வரும். சிலருக்கு உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற ஆதாயம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.
சந்திராஷ்டமம்: ஏப். 22.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 17, 18, 26, 29. மே 8, 9.

பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடங்கள் விலகும்.

கேட்டை
திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் சித்திரை மாதம் நன்மையான மாதமாகும். ஏப். 23 முதல் உங்கள் ராசிக்கு லாபாதிபதியான புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரிகள்,  கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். மாதம் முழுவதும் உங்கள் ஜீவனாதிபதி சூரியன் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னைகள், சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். எடுக்கும். முயற்சிகள் வெற்றியாகும். உங்களை எதிர்த்து செயல்பட்டோரின் நிலை மாறும். உங்களிடமே சமாதானம் பேசுவதற்கு வருவர். வம்பு வழக்கு என்று சங்கடப்பட்டு வந்த நிலைகளிலும் மாற்றம் உண்டாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். மருத்துவ செலவுகள் குறையும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். ராசிநாதன் செவ்வாய் மே 10 முதல் நெருப்பு ராசியான மேஷத்தில் ஆட்சி பெறுவதால் உங்கள் திறமை வெளிப்படும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிக்க முடியும். கடன் தொல்லைகள் விலகும். அரசியல் வாதிகளுக்கு நீண்டநாள் கனவு நனவாகும். தேர்தல் களத்தில் செல்வாக்கு மிக்கவராக நடைபோடுவீர்கள். சிலருக்கு புதிய சொத்து வாகனம் என்ற கனவு நனவாகும். மாணவர்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப். 23.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 14, 18, 23. மே 5, 9, 14.

பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மைகள் உண்டாகும். சங்கடங்கள் விலகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap