Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்/மிதுனம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் : மிதுனம்
13 ஏப் 2026

முந்தைய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம்: உழைப்பால் முன்னேறுவீர்கள்

தைரிய, வீரிய, பராக்கிரமக்காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ ஆண்டில் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும், பொன்னும் பொருளும் சேரும், புகழும் பெருமையும் உண்டாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழிலில் அக்கறை உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பு கூடும். வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வருமானம் கூடும். வீடு, வாகனம், ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும்.

சனி சஞ்சாரம்: மிருகசீரிடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப சனியாக சஞ்சரிப்பவர் வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார், வேலையில் உயர்வையும் நிம்மதியையும் உண்டாக்குவார், வசதி வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும் அதிகரிப்பார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவன சனியாக சஞ்சரிப்பவர் வேலையில் நியாயமாக நடந்து கொள்பவர்களை முன்னேற்றப்பாதையில் நடைபோட வைப்பார், தவறு செய்பவர்களுக்கும் வேலையில் அக்கறை இல்லாமல் பொறுப்பற்றத்தனமாய் இருப்பவர்களுக்கும், தவறு செய்பவர்களுக்கும் மெமோ இடைநீக்கம் என்று தண்டனை அளிப்பார். சுய தொழில் செய்பவர்களுக்கு உழைப்பால் முன்னேற்றத்தை உண்டாக்குவார்.

ராகு – கேது சஞ்சாரம்: 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரையிலும், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது, முயற்சிகளை வெற்றியாக்குவார், தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் நடைபோட வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார், தொழிற்கூடங்கள் நடத்தி வருவோருக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பையும் லாபத்தையும் அதிகரிப்பார், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை உண்டாக்குவார்.

குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். பழைய கடன்கள் அடைபடும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தடைபட்ட வேலைகள் முடிவிற்குவரும், பெரியோர் ஆதரவு உண்டாகும். திருமண வயதினரின் கனவு நனவாகும். ஜீவன சனியின் பாதிப்புகள் தீரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். செய்துவரும் தொழில் லாபம் தரும்.

சூரிய சஞ்சாரம்: 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆடி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களிலும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஆவணி, கார்த்திகை, பங்குனி, சித்திரை மாதங்களிலும் உங்கள் ராசிக்கு 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் தன்னம்பிக்கையோடு செயல்பட வைப்பார். எடுத்த வேலைகளை முடிக்க முடியும். நினைத்ததை சாதிக்க முடியும். எதிர்ப்பு போட்டி வம்பு வழக்கு என்பதெல்லாம் இல்லாமல் போகும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வேலைக்காக மேற்கோள்ளும் முயற்சி வெற்றியாகும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் விரும்பிய இடத்திற்கு மாற்றமும் ஏற்படும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும் சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும்.

பொதுப்பலன்: பராபவ ஆண்டு முன்னேற்றமான ஆண்டாக இருக்கும், எந்தவொரு வேலையும் நடக்கவில்லை, எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்ற நிலை மாறும், திட்டமிட்டும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவோருக்கு வருமானம் அதிகரிக்கும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும், குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

தொழில்: செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும், எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், கேட்டரிங், ஆடை, ஆபரணம் மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதிநிறுவனம், ஷேர் மார்க்கெட் தொழில்கள் லாபமடையும், மருத்துவர்கள், காவல் துறையினர், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் முன்னேற்றமடைவர்.

பணியாளர்கள்: பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமையை உணருவார்கள். வேலையில் அக்கறை உடையவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் மேல் அதிகாரியின் ஆலோசனையின்படி செயல்படுவது நன்மையாகும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோருக்கு மெமோ, இடைநீக்கம் என்ற நிலை உருவாகலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

பெண்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவது நன்மையாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். கணவருடன் இணக்கமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

கல்வி: உயர் கல்வி கனவு நனவாகும், சட்டம், மருத்துவம், பொறியியல் படிக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் விலகும், நீண்ட நாட்களாக சங்கடப்படுத்தி வந்த நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். மனக்குழப்பம் விலகி தெளிவு பிறக்கும்.  ஆரோக்கியமாக நடைபோட முடியும்.

குடும்பம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். கையில் பணம் புழங்கும், சேமிப்பு உயரும் உதவி என்று உங்களைத்தேடி வருபவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். 

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

திருவாதிரை: முயற்சி வெற்றியாகும்

வித்யா காரகனான புதன், யோகக்காரகனான ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் பராபவ ஆண்டு முயற்சியாலும் உழைப்பாலும் வெற்றி அடையக்கூடிய ஆண்டாக இருக்கும். வசதி, வாய்ப்பு, பதவி, சொத்து சுகம் என்ற தேடல் அதிகரிக்கும். விரும்பியதை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் பொறுப்பு கூடும், குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும்.

சனி சஞ்சாரம்: ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 10ம் இடமான மீனத்தில் ஜீவன சனியாக சஞ்சரிப்பதால் வேலைபளு கூடும். எந்த ஒன்றையும் எளிதாக அடைந்து வந்த நிலைமாறும். உத்தியோகத்தில் தவறு செய்பவர்கள் மெமோ, இடைநீக்கம், பதவி உயர்வில் தடை என்ற நிலைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். செய்துவரும் தொழிலில் முயற்சிக்கும் முதலீட்டிற்கும் ஏற்ற ஆதாயத்தையே காண முடியும், பெரிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்த பொருள்களுக்குரிய பணத்தை வாங்குவதற்கு அலைய வேண்டியதாக இருக்கும்.

ராகு – கேது சஞ்சாரம்: நவ. 13 வரையில் பாக்ய ஸ்தானத்தில் ராகுவும், சகாய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் அதுவரை செல்வாக்கோடு நடைபோடுவீர்கள், பெரியோர் ஆதரவும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். நவ.13 முதல் கேது, தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும், ராகு அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானமும் கவனமும் தேவைப்படும்.

குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027. பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் மே 26 வரை அலைச்சல் அதிகரிக்கும், சிலருக்கு இடமாற்றம் ஏற்படும், திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு என்ற கனவுகள் நனவாகும். மே 26 முதல் உடல்நிலை சீராகும் எதிர்ப்பு விலகும், வழக்கு விவகாரம் சாதகமாகும், மறைந்த செல்வாக்கு வெளிப்படும், தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும், ஜீவன சனியால் ஏற்படும் சங்கடங்கள் விலகும்.

சூரிய சஞ்சாரம்: ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு நேரத்தில் 8 கிரகங்கள் எதிர்மறையாக சஞ்சரித்து ஜாதகருக்கு பாதகமான பலன்களை வழங்கினாலும் அந்த நேரத்தில் ஆத்ம காரகனான சூரியன் 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரித்தால் ஒளிமிக்க சூரியன்போல் அந்த ஜாதகரின் வாழ்க்கை இருக்கும். அந்த நிலையில், ஆவணி, கார்த்திகை, பங்குனி, சித்திரை மாதங்கள் உங்கள் வாழ்வில் யோகமான மாதங்களாக இருக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், வேலை, தொழில் முன்னேற்றமடையும், செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும், அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும், அரசுவழி முயற்சிகள் சாதகமாகும், வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும், வரவேண்டிய பணம் வரும். ஆயிரம் யானைகளுக்கு மத்தியில் ஒரு சிங்கமென வாழக்கூடிய அளவிற்கு வலிமை உண்டாகும்.

பொதுப்பலன்: குரு சஞ்சாரம் மற்றும் பார்வைகள், நவ. 13 வரை கேது, நான்கு மாதங்கள் சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் பராபவ ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாக இருக்கும், நீண்டநாள் கனவு நனவாகும், இடம் வீடு வாகனம் என்று சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.

தொழில்: வியாபாரம் தொழில் புதிய முயற்சிகளில் நிதானம் தேவை, எக்ஸ்போர்ட், பைனான்ஸ், இன்டஸ்ட்ரீஸ், ஐ.டி, ஷேர் மார்க்கெட், வாகன விற்பனை, தொழிற்சாலை, டிராவல்ஸ், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜன்சி, சினிமா, சின்னத்திரை, வலைதளம், ஏஐ தொழில்கள் வளர்ச்சி அடையும், மற்ற தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.

பணியாளர்கள்: வேலைப்பார்க்கும் இடத்தில் நிதானமும் கவனமும் நேர்மையும் அவசியம், தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு திறமைக்கேற்ற உயர்வும் சலுகையும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் சலுகைகளும் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்கள் சிலருக்கு வேலை நிரந்தரமாகும், வெளிநாட்டில் வேலைப்பார்ப்பவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும்

பெண்கள்: உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் நிலைக்கேற்ப தேவைகள் பூர்த்தியாகும், குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவரின் ஆதரவு கிடைக்கும், பிள்ளைகள்மீது அக்கறை கூடும், பொன் பொருள் சேரும், வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும், உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

கல்வி: பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுாரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: வேலைபளுவின் காரணமாக உடல்நிலையில் அவ்வப்போது சிறு சங்கடங்கள் தோன்றக்கூடும், பரம்பரைநோய், பருவநோய் என்று தலைக்காட்டும் என்றாலும் அவை மருத்துவத்திற்கு கட்டுப்படும்.

குடும்பம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும், வீடு, இடம், வாகனம் வாங்கும் கனவு நனவாகும். பொருளாதார நிலை உயரும், பழைய கடன்கள் அடைபடும், வேலையின் காரணமாக  கணவன் ஓரிடம் மனைவி ஒரிடம் என்று வாழ்ந்த நிலைமாறும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், பிள்ளைகளின் கல்வி, திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும்.

பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடங்கள் விலகும், வாழ்க்கை வளமாகும்.

புனர்பூசம்: உழைப்பால் உயர்வு

பொன் பொருள் புகழுக்கு காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4 ம் பாதமான கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் பராபவ ஆண்டில் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, உழைப்பிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். முதலீட்டிற்கேற்ற வருமானம் வரும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். உத்தியோகம், தொழிலில் கவனம் கூடும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இதுவரை இருந்த போராட்டங்கள் பிரச்சனைகள் எல்லாம் முடிவிற்கு வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கும் சொல்வாக்கும் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.

சனி சஞ்சாரம்: புனர்பூசம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவன சனியாக சஞ்சரிப்பவர், வியாபாரம் தொழிலில் அக்கறையை அதிகரிப்பார். தவறுக்கு இடம்கொடுக்காமல் செயல்படுபவர்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். உழைத்தால்தான் உயர்வு என்ற நிலையை ஏற்படுத்துவார். அதனால் வேலைப்பளு கூடும். உத்தியோகத்தில் தவறு செய்பவர்களுக்கு மெமோ, இடைநீக்கம், பதவி உயர்வில் தடை என்ற நிலைகள் உருவாகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பாக்ய சனியாக சஞ்சரிப்பவர், சமூகத்தில் செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். நெருக்கடிகளையும் போராட்டங்களையும் சந்தித்து வந்தவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். பட்டம், பதவி, அந்தஸ்து, புகழ், வீடு, மனை, வாசல், வாகனம் என்ற கனவுகளை நனவாக்குவார்.

ராகு – கேது சஞ்சாரம்: 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 13 வரையில் பாக்ய ராகுவும், சகாய கேதுவும் செல்வம் செல்வாக்கோடு நடைபோட வைப்பார்கள். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்கள். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார்கள். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமான நிலையை உருவாக்குவார்கள். நவ.13 முதல் கேது தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலும், ராகு அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானமும் கவனமும் தேவைப்படும். 4 ம் பாதத்தினருக்கு, நவ. 13 வரை ராகு அஷ்டம ஸ்தானத்திலும், கேது தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் அதன்பிறகு, ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு நிறையவே படிப்பினைகளையும் பாடங்களையும் வழங்குவார்கள் என்பதால் அனைத்திலும் நிதானமாகவும், திட்டமிட்டும் செயல்படுவது நன்மையாகும்.

குரு சஞ்சாரம்: 2026 மே 26 வரை மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கிறார், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர் 2027 பிப். 13 முதல் மீண்டும் கடகத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 26 வரை அலைச்சல் அதிகரிக்கும், சிலருக்கு இடமாற்றம் ஏற்படும், திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு என்ற கனவுகள் நனவாகும். மே 26 முதல் குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும், வழக்கு விவகாரம் சாதகமாகும், தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும், ஜீவன சனியால் ஏற்படும் சங்கடங்கள் விலகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இடம், வீடு, வாகனம் என்ற ஆசைகள் நிறைவேறும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் நிலைக்கேற்ப பலன்கள் உண்டாகும். வாழ்வில் நிம்மதி இருக்கும்.

சூரிய சஞ்சாரம்: 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, ஆவணி, கார்த்திகை, பங்குனி, சித்திரை மாதங்களிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு புரட்டாசி, மார்கழி, சித்திரை, வைகாசி மாதங்களிலும் ஆத்ம காரகனான சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால்,  வாழ்க்கை வளமாகும், எடுத்த வேலைகள் வெற்றியாகும், நினைத்த காரியங்கள் நடந்தேறும், வேலை, தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும், அரசுவழி முயற்சிகள் சாதகமாகும், வம்பு வழக்குகள் முடிவிற்குவரும், வரவேண்டிய பணம் வரும்.

பொதுப்பலன்: பராபவ ஆண்டு உங்கள் வாழ்க்கையில் யோகமான ஆண்டாக இருக்கும், தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும், இடம் வீடு வாகனம் என்று சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.

தொழில்: அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் தொழிலில் கண்ணும் கருத்தமாக இருக்க வேண்டிய காலமிது. புதிய முதலீடு செய்வதற்கு முன் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது நன்மையாகும். சர்வதேச விவகாரங்கள் உங்கள் தொழிலிலும் எதிரொலிக்கும் என்பதால் உற்பத்தி, விற்பனை இரண்டிலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., ஏ.ஐ., அலைபேசி, ஏற்றுமதி, இறக்குமதி, பங்கு வர்த்தகம், நிதிநிறுவனம், தொழிற்சாலை, ட்ராவல்ஸ், குடிநீர், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட், ஜீவல்லரி, அழகு சாதன பொருட்கள் விற்பனை லாபம் தரும்.

பணியாளர்கள்: வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேலையின்மீது பயம் இருக்கும். சிலர் சொந்த ஊருக்குத் திரும்பும் நிலையும் உருவாகும். உள்நாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலைபளு கூடும் என்றாலும் திறமைக்கேற்ற உயர்வும் சலுகையும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்கள் இக்காலத்தில் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது அவசியம். வேலையில் சரியாக இருப்பவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் சலுகைகளும் கிடைக்கும்.

பெண்கள்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தினர் ஆதரவால் நீண்டநாள்  கனவுகள் நனவாகும் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்று அவரவர் வயதிற்கேற்ப தேவைகள் பூர்த்தியாகும், வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். கணவருடன் இணக்கமான நிலை இருக்கும். பிள்ளைகள்மீது அக்கறை கூடும், பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும்.

கல்வி: மேல்நிலையில் இருந்து உயர் கல்விக்கு செல்வீர்கள். எதிர்பார்த்த கல்லுாரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக மருத்துவ மனைகளுக்கு அடிக்கடி சென்று வந்தவர்களுக்கு நோய்களில் இருந்து விடுதலைக் கிடைக்கும். ஆரோக்யம் சீராகும். விபத்து, பரம்பரைநோய், தொற்றுநோய், பருவநோய் என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு ஏற்பட்ட பயம் போகும்.

குடும்பம்: குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பண நெருக்கடி நீங்கும், இடம், வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள்.

பரிகாரம்: ஜெகந்நாதரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். சங்கடங்கள் விலகும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap