sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

/

மீனம்

/

மீனம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

ராகு கேது பெயர்ச்சி பலன் : மீனம்
16 நவ 2012 to 16 ஜூன் 2014

முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

rasi

மீனம்

எவருக்கும் தன்னால்  இயன்ற உதவி செய்கின்ற மீனராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் ராகுவும், இரண்டாம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவின் 3, 11ம் பார்வை முறையே எதிரி, தொழில் ஸ்தானங்களிலும், கேதுவின் 3, 11ம் பார்வை முறையே வீடு, சுபச்செலவு ஸ்தானங்களிலும் பதிகிறது. இது சாதகமற்ற நிலை என்றாலும், பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக சில அனுகூலங்களும் கிடைக்கும்.பணவரவு குறைவதால் உறவினர்கள் விலகுவர். அதேநேரம், கடன்கள் வசூலாகி முக்கியச் செலவுகளை ஈடுகட்ட உதவும்.வீடு, வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறை தேவை. தாய்வழி உறவினர்களிடம் குடும்பத்தின் பழைய விவகாரம் குறித்து பேச வேண்டாம். புத்திரர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர். சிறந்த தேர்ச்சியும் வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் கிடைக்கும். மருத்துவச் செலவு எகிறும். எதிரிகளால் இருந்த தொந்தரவைச் சரிசெய்ய வீடு, பணியிடமாற்றம் சிலர் மேற்கொள்வர். சொத்தின் பேரில் கடன் பெறுபவர்கள் நம்பகமானவர்களிடம் வாங்குவது நல்லது. தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்துகொள்வர். நண்பர்கள் தம்மால் இயன்ற உதவி புரிவர். மூத்த சகோதர, சகோதரிகள் சொல்லும் சிறந்த ஆலோசனைகளைப் பின்பற்றி நடப்பதால் நல்வழி பிறக்கும். வேலைவாய்ப்பு விரும்புபவர் களுக்கு ஓரளவு அனுகூலம் உண்டு.

தொழிலதிபர்கள்: தொழிலில் வளர்ச்சி பெற தேவையான நடைமுறை மாற்றங்களை மேற்கொள்வது அவசியம். புதிய ஒப்பந்தங்களைப் பெற சலுகைகளை வழங்க வேண்டியிருக்கும். இதனால் லாபம் குறையும். அனுபவம் இல்லாத தொழில்களில் கூட்டுசேர முயற்சிக்க வேண்டாம். அரசு தொடர்பான உதவி பெற தாமதமாகும். தொழிற்சாலை பாதுகாப்பு நடவடிக்கையில் அக்கறை வேண்டும்.

வியாபாரிகள்: விற்பனை சுமாராக இருக்கும். அதிக லாபம் எதிர்பார்ப்பதற்கு இல்லை. சரக்கு பரிவர்த்தனை, இருப்பு வைக்கும் இடங்களில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்றுவது நல்லது. புதிய கிளைகள் துவக்கும் முன், அதை நடத்துமளவு பணவசதி இருக்கிறதா என யோசித்து கால் வைப்பது நல்லது.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறை பணியாளர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். பணியில் உள்ள அனுபவசாலிகளின் ஆலோசனை, உதவி பெற்று செயல்படுவதால் பணி இலக்கு படிப்படியாக நிறைவேறும். சலுகைகளைப் கேட்டுப்பெறுவதில் இதமான அணுகுமுறை நற்பலன் பெற உதவும். அளவான பணவரவு கிடைப்பதால் குடும்ப செலவுகளுக்காக கடன் பெறுவீர்கள்.

பெண்கள்: பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு, சலுகை பெறுவதில் தாமதம் இருக்கும். குடும்பப் பெண்கள் குடும்ப உறுப்பினர்களின் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளைத் திட்டமிடுவது அவசியம். விலைமதிப்புள்ள பொருட்களை இரவல் கொடுக்க, வாங்கக் கூடாது. தாய்வீட்டு சீர்முறை பெறுவதில் நிதான அணுகுமுறை நற்பலன் தரும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனம் இட்டால் நல்லது.

மாணவர்கள்: முழுகவனத்துடன் படிப்பதால் மட்டுமே எதிர்பார்த்த தேர்ச்சி பெறலாம். செலவில் சிக்கனம் நல்லது. சக மாணவர்களின் விலைமதிப்புள்ள பொருட்களை இரவல் வாங்கி பயன்படுத்துவதால் பழுது ஏற்படலாம். கவனம் தேவை. வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்பவர்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிற பணி கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: உங்களின் அரசியல்பணி அமைதியான முறையில் இருந்தாலும் ஆதரவாளர்கள் உங்கள் செயல்களை பரபரப்பு நிறைந்ததாக மாற்ற முயற்சிப்பர். பதவியை தற்காத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட சிரமங்கள் விலகும். புத்திரர்கள் உங்கள் அரசியல் பணி சிறக்க தம்மால் இயன்ற உதவி புரிவர்.

விவசாயிகள்: எதிர்பார்த்த மகசூல் கிடைத்து பணவரவு சீராகும். கால்நடை வளர்ப்பில் சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னையில் இருந்த நெருக்குதல் குறையும்.

பரிகாரப் பாடல்:
அன்னப் பறவை தாங்கும் அழகிய மலர்ப்பாதம்
அன்பரைக் காத்தருளும் நல்மனமுடையவளே!
அகிலம் அனைத்தும் காக்கும் ஆதிலட்சுமியே!
செல்வ வளத்தை எமக்கு வாரி வழங்கிடுவாய்.

பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் ராகு கேது பெயர்ச்சி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us