Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/சனிப்பெயர்ச்சி பலன்கள்/விருச்சிகம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் : விருச்சிகம்
04 மார் 2026 to 22 மார் 2028

முந்தைய சனிப்பெயர்ச்சி பலன்கள்

rasi

விருச்சிகம் :

விசாகம்: உயர்வு காத்திருக்கு

ஞானக்காரகன் குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும் 1,2,3 ம் பாதங்களான துலாமில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும், 4 ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக சொல்ல முடியாத சங்கடங்களை அனுபவித்து வந்த உங்களுக்கு நடைபெற இருக்கும் சனிப்பெயர்ச்சி எத்தகைய பலன்களை வழங்கப் போகிறது? 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சத்ரு ஜெய சனியாகவும்,  4 ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய சனியாகவும் சஞ்சரிப்பவர்,
மார்ச். 6, 2026 முதல் 1,2,3 ம் பாதத்தினருக்கு மேன்மையான பலன்களை வழங்கிட உள்ளார் என்பதால்
உங்கள் நிலையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் விலகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும், எதிர்ப்பு, பகை என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் விலகும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் உயரும். தொழில் வளர்ச்சியடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். 4ம் பாதத்தினருக்கு, குடும்பத்தில் இடையூறு, கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு, தொழிலில் முன்னேற்றமில்லா நிலை, உத்தியோகத்தில் பிரச்சனைகள், மேல் அதிகாரியுடன் விரோதம், நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடு, கல்வியில் தடைகள் என்று ஏற்படும் என்பது பொதுப்பலன்களாகும். இக்காலத்தில் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் இப்பலன்களில் மாறுபாடு இருக்கும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் பார்வைகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் இக்காலங்களில் நீங்கும். மறைமுகத் தொல்லைகள் விலகும். உடல்நிலை சீராகும். விரயச்செலவுகள் கட்டுப்படும். 4ம் பாதத்தினருக்கு 5ம் இட சனியின் அல்லல்கள் அகலும், இன்னல்கள் விலகும், எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

ராகு - கேது சஞ்சாரம் விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ.13, 2026 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பண வரவு இருக்கும். செய்துவரும் தொழில் லாபமடையும். புதிய சொத்து சேரும். 4ம் பாதத்தினருக்கு நவ. 13, 2026 முதல் ராகு சகாய ஸ்தானத்தில்  சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைக்குரிய வழி தெரியும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, விசாகம் 1,2,3ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மிதுனம், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் சுபிட்சமான பலன்கள் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். கடகத்திலும் கன்னியிலும் சஞ்சரிக்கும் காலங்களில் வியாபாரம் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். 4ம் பாதத்தினருக்கு மிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். பொன், பொருள் சேரும். கடகம் கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஐந்தாமிட சனியால் ஏற்படும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும்.

பொதுப்பலன் 
இதுவரை நீங்கள் சந்தித்து வந்த போராட்ட நிலை மாறும். எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.

தொழில் 
தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் பிரச்சனைகள் விலகும். தைரியமுடன் செயல்படத் தொடங்குவீர்கள் . இக்காலத்தில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனத்தொழில்கள், மருத்துவம், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம், ஹோட்டல், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல் ஏஜென்சி, பில்டிங் டிசைனிங், டெக்கரேசன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை முன்னேற்றமடையும். ஆசிரியர்கள், மத பிரச்சாரகர்கள், மேடைப் பேச்சாளர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் மற்றும் பொது சேவையில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும்.

பணியாளர்கள்
உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் இல்லை, சரியான அங்கீகாரம் இல்லை என்ற நிலைகள் எல்லாம் மாறும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரியின் ஆதரவு உண்டாகும். தினப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு தற்போதுள்ள வேலையை விட நல்ல இடத்தில் எதிர்பார்த்த சம்பளத்துடன் வேலைக் கிடைக்கும்.

பெண்கள்
மனதில் இருந்த குழப்பம், உடலில் ஏற்பட்ட நலிவு விலகும். இதுவரை கிடைத்த அனுபவங்களை எல்லாம் பாடமாகக் கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். ஆடை ஆபரணம் நவீன பொருட்கள் என்று சேரும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.

கல்வி 
இக்காலத்தில் படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதுடன், கேளிக்கை பொழுதுபோக்கு தவறான நட்புகளை விட்டு விலகி படிப்பில் கவனம் கொள்பவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்த உங்களுக்கு, இக்காலம் அதிலிருந்து விடுபடக்கூடிய காலமாகும். பரம்பரைநோய் தொற்றுநோய் என்று சங்கடப்பட்டு வந்த நிலையெல்லாம் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். பெரிய அளவில் பயமுறுத்தி வந்த நோய்கள் நவீன சிகிச்சையால் கட்டுப்படும்.

குடும்பம்
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். மனதில் இருந்த சங்கடங்கள் குறையும். பெரியோரின் ஆதரவும், குலதெய்வத்தின் அனுகூலமும் உங்கள் நிலையை உயர்த்தும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும். ஒரு சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகள் விருப்பப்படி அவர்களுடைய மேற்கல்விக்கு வழி அமைப்பீர்கள். உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். ஐந்தாண்டுகளாக அனுபவித்து வந்த நெருக்கடிகள் நீங்கும்.

பரிகாரம்:ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.

அனுஷம்: உழைப்பு உயர்வுதரும்

தைரிய வீரிய காரகன் செவ்வாய், கர்மக்காரகன் சனி அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரித்து, வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு சோதனைகளை வழங்கி வந்தார் சனி பகவான். தாய்வழி உறவுகளுடன் பகை, நிம்மதி என்பது இல்லாத நிலை, உடல்ரீதியாக எப்போதும் கவலை, தொழிலிலும் ஏதாகிலும் ஒரு தடை, சனி பகவானின் 10ம் பார்வை ராசிக்கு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று வந்ததுடன் எந்த ஒன்றையும் எடுத்தோம் முடித்தோம் என்று முடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு, மார்ச். 6, 2026 முதல் மாற்றம் ஏற்படப் போகிறது, அர்த்தாஷ்டம சனி முடிவடைந்து பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தில் சனி சஞ்சரிக்கப்போவதால் சனி பகவானின் பார்வை உங்கள் ராசியை விட்டு விலகப்போகிறது என்பதே உங்களுக்கு நன்மையாகும். 5ம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் இக்காலமாவது எங்கள் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படுமா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 7,11,2 ம் இடங்களைப் பார்க்கப்போகிறார். சனி பகவானின் பார்வைக்கு ஆளாகும் பாவகங்கள் சோதனைக்கு ஆளாகும் என்பது பொதுவிதி என்பதால், இக்காலத்தில், குடும்பத்தில் எதிர்பாராத நெருக்கடிகள், கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு, கூட்டுத் தொழிலில் பிரச்சனைகள், நண்பர்களுடன் விரோதம், உயர்கல்வியில் தடைகள், உறவினர்களுடன் பகை என்ற நிலை உருவானாலும், வருமானம் கூடுதலாகும், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், கையில் பணம் புழங்கும் என்பது பொதுப்பலன்களாகும். இக்காலத்தில் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் இப்பலன்களில் மாறுபாடு இருக்கும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில் 5ம் இட சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் பாதிப்புகள் உங்களை நெருங்காமல் போகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தம்பதிக்குள் இருந்து கருத்து வேறுபாடு விலகும். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும்.

ராகு - கேது சஞ்சாரம்  நவ.13, 2026 வரை சுக ஸ்தானத்தில் ராகு, ஜீவன ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் ஆசை அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நவ. 13, 2026 முதல் ராகு சகாய ஸ்தானத்திலும், கேது பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியம் நடந்தேறும். பெரியோர் துணையும் தெய்வ அருளும் உண்டாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, மிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் உங்கள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொழில் லாபமடையும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பொன், பொருள் சேரும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஐந்தாமிட சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். திருமணம், குழந்தை பாக்யம், குழந்தைகளால் பெருமை, சொந்த வீடு, வாகனம் என்று உங்கள் நிலை உயரும். கையில் பணம் புரளும்.

பொதுப்பலன் 
சனி பகவானின் பார்வை ராசியை விட்டு விலகுவதாலும், கடக, கன்னி குருவினாலும், மகர ராகுவினாலும் உங்களுக்கிருந்த போராட்ட நிலை மாறும். உற்சாகமாகவும் ஆரோக்கியத்துடனும் செயல்படக்கூடிய நிலை உண்டாகும். செய்துவரும் தொழில் லாபம்தரும். சிலர் புதியதாகவும் வேறு தொழில் தொடங்குவீர்கள். எந்தவொரு முன்னேற்றமும் இல்லையே என்று மனம் புழுங்கி வந்தவர்களுக்கு நம்பிக்கை ஒளி உண்டாகும். எடுக்கும் வேலைகளில் வெற்றி ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.  உத்தியோத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். பிள்ளைகளுக்காக கவலைப்பட்டு வந்த நிலைமாறும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.

தொழில் 
சனி பகவானின் பார்வை ராசியை விட்டு விலகுவதால் தொழிலில் ஏற்பட்ட தடைகள், பிரச்சனைகள், போட்டிகள், மந்தநிலை யாவும் விலகும். உங்கள் முயற்சிகள் யாவும் இனி லாபமடையும்.
விவசாயம், செங்கல் தயாரிப்பு, எம்சேண்டல், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், சிறு குறு தொழிற்சாலைகள், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், இன்ஜினியரிங் பேக்டரி, உதிரி பாகங்கள  தயாரிப்பு மற்றும் விற்பனை, வாகன விற்பனை, ட்ராவல்ஸ், கெமிக்கல், மருத்துவம், விளையாட்டுப் பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை, கம்ப்யூட்டர், பொறியியல், டிராவல் ஏஜென்சி, ஹார்டுவேர் தொழில்கள் லாபம் அடையும்.

பணியாளர்கள்
அர்த்தாஷ்டம சனியால் எந்த ஒன்றிலும் ஈடுபாடில்லாமல் நடப்பது நடக்கட்டும் என்ற நிலைக்குச்சென்ற உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். பூர்வ புண்ணிய சனியின் பார்வை லாப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் உங்கள் சங்கடங்கள் இனி விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். தனியார் நிறுவனங்களில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு திறமைக்கேற்ற மரியாதை உண்டாகும். வேலையில் ஏற்பட்ட பயம் போகும்.

பெண்கள்
அர்த்தாஷ்டம சனியாலும், அவருடைய 10 ம் பார்வை ராசிக்கு ஏற்பட்டதாலும் மனதில் நிம்மதி இல்லை, உடலில் பாதிப்பு என்று அவதிப்பட்டு வந்த நிலைமாறும். குடும்ப பொறுப்புகள் கூடும். வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை ஏற்படும். பொன் பொருள், புதிய இடம், வீடு, வாகனம் சேரும். சுய தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

கல்வி 
ஐந்தாமிடத்தில் சனி சஞ்சரிப்பதால் உயர் கல்விக்காக திட்டமிட்டிருப்பவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் ஆலோசனையை  ஏற்பதுடன் வீட்டில் இருக்கும் நேரங்களில் மொபைல், நட்பு, விளையாட்டு என்று இருக்காமல் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம்.

உடல்நிலை
அர்த்தாஷ்ட சனி விலகுவதுடன், சனிப்பார்வையும் உங்களை விட்டு விலகுவதால், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் சிகிச்சையால் குணமாகும். செயல்பட முடியாத அளவிற்கு வலியோடும் வேதனையோடும் வாழ்ந்துவந்த நிலை மாறும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உருவாகும்.

குடும்பம்
தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்ற எண்ணம் உருவாகும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். கடன் தொல்லை விலகும். புதிய வீடு, வாகனம், பொன் பொருள் சேரும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும். உறவினர்கள் மத்தியில் மீண்டும் உங்கள் செல்வாக்கு உயரும்.

பரிகாரம் :திருச்செந்தூர் முருகனை வழிபட்டுவர வாழ்வில் நிம்மதி உண்டாகும். சங்கடங்கள் விலகும்.

கேட்டை: நெருக்கடி நீங்கும் 

வித்யா காரகன் புதன், தைரிய வீரிய காரகன் செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரித்து சங்கடமான பலன்களை வழங்கி வந்த சனி பகவான், மார்ச். 6, 2026 முதல் உங்கள் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கப்போகிறார் என்பதால் உங்கள் ராசிக்கு ஏற்பட்ட சனிப்பார்வையும் இப்போது விலகப் போகிறது.
அர்த்தாஷ்டம சனியால் அவதிப்பட்டு வந்த எங்களை 5ம் இட சனி பாதுகாப்பாரா? அல்லது இப்போதும் அதே நிலைத் தொடருமா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. கோச்சார ரீதியாக 4ம் இடத்தில் சஞ்சரித்த காலத்திற்கும் இக்காலத்திற்கும் பலன்கள் நிறையவே மாறுபடும். 5ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானமாகும். உயர்கல்வி, காதல் போன்றவற்றுக்கும் 5ம் இடமே காரகமாகிறது. இங்கு சஞ்சரிக்கும் காலத்தில் சனி பகவானின் 3,7,10 ம் பார்வைகள் உங்கள் ராசிக்கு 7,11,2 ம் இடங்களுக்கு கிடைக்கும் என்பதால், இக்காலத்தில், மனம் குழப்பமடையும், உயர்கல்வியை எட்ட வேண்டிய நேரத்தில் காதல், பிரச்சனை என்று தடைகள் ஏற்படும், தம்பதிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு உருவாகும். பூர்வீக சொத்துகளில் பிரச்சனை, பிள்ளைகளால் சங்கடம், குடும்பத்தில் எதிர்பாராத நெருக்கடி, நண்பர்களுடன் விரோதம், உறவினர்களுடன் பகை, தொழிலில் பிரச்சனை, உத்தியோகத்தில் மேல் அதிகாரியுடன் மோதல் என்று போராட்டமாக இருந்தாலும்,  வருமானத்திற்கும் வசதி வாய்ப்புகளுக்கும் குறைவிருக்காது, தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். உங்கள் சுய ஜாதகம் பலமாக இருந்தாலும், நடக்கும் திசா புத்தி சாதகமாக இருந்தாலும் எந்தவிதமான சங்கடங்களும் உங்களை நெருங்காமல் போகும்.

பலன்களில் மாற்றம்
சனி பகவான் 2026 - மார்ச். 13, 2026 - ஏப். 11, 2026 வரை அஸ்தமனம், ஜூலை. 15, 2026 - நவ. 30, 2026 வரை வக்கிரம், மார்ச். 25, 2027 - ஏப். 24, 2027 வரை அஸ்தமனம், ஜூலை. 28, 2027 - டிச. 13, 2027 வரை வக்கிரம் என்ற நிலைக்குச் செல்வதால் இக்காலத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணவரவு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். 5ம் இட சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் பாதிப்புகள் உங்களை நெருங்காமல் போகும்.

ராகு - கேது சஞ்சாரம்  நவ.13, 2026 வரை சுக ஸ்தானத்தில் ராகு, ஜீவன ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகள் கை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். நவ. 13, 2026 முதல் ராகு சகாய ஸ்தானத்திலும், கேது பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வரவேண்டிய பணம் வரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு இடமும் மரியாதையும் உருவாகும்.

குரு சஞ்சாரம்
குரு பகவான் மே.26, 2026 வரை மிதுனத்திலும், மே.26, 2026 - அக்.20 வரை கடகத்திலும், அக்.20, 2026 - பிப்.13, 2027 வரை சிம்மத்திலும், பிப்.13, 2027 -  ஜூன்.13, 2027 வரை கடகத்திலும், ஜூன்.13, 2027 - நவ.16, 2027 வரை சிம்மத்திலும், நவ.16, 2027 - ஏப்.17, 2028 வரை கன்னியிலும் சஞ்சரிக்கிறார். இந்த சஞ்சார நிலைகள் காரணமாக, மிதுனம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணவரவு கூடும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். கடகம், கன்னியில் சஞ்சரிக்கும் காலங்களில் ஐந்தாமிட சனியாலும் அவருடைய பார்வைகளாலும் ஏற்படும் சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். கையில் பணம் புரளும்.

பொதுப்பலன் 
சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றமடைந்து வரும் உங்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். போராட்ட நிலை மாறும். குரு அருளால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். தொழில் லாபம்தரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலை உயரும். ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். 

தொழில் 
என்னதான் முயற்சி செய்தாலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றிருந்த நிலை மாறும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் போராட்டங்கள் விலகும். வியாபாரம், நிதி நிறுவனம், ஸ்டேஷனரி, அச்சகம், செய்தித்தாள், நோட்டுப் புத்தகம், காலண்டர் தயாரிப்பு, விற்பனை, தகவல் தொடர்பு, விளம்பரம், ஷேர் மார்க்கெட், காண்ட்ராக்ட், ஏஜென்சி, கூட்டுத் தொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், மருத்துவம், ரசாயனம், டிராவல் ஏஜென்சி, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் முன்னேற்றமடையும்.

பணியாளர்கள்
தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையில்லை, பார்க்கும் வேலையிலும் நிம்மதி இல்லை என்றிருந்த நிலை மாறும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலர், பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

பெண்கள்
மனதில் இருந்த அழுத்தம் விலகும். உடலில் ஏற்பட்ட நலிவு நீங்கும். நீண்டநாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற அவரவர் கனவு நனவாகும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான நிலை உருவாகும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். பொன் பொருள் சேர்க்கையும், வெளி வட்டாரத்தில் செல்வாக்கும் அதிகரிக்கும்.

கல்வி 
மேல்நிலை வகுப்பில் படித்து வருபவர்கள் இக்காலத்தில் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவதுடன் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும்.

உடல்நிலை சனிப்பார்வை உங்களை விட்டு விலகுவதால் மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்யம் சீராகும். மூச்சுத்திணறல், நரம்புக் கோளாறு என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் நவீன மருத்துவத்தால் குணமடைவீர்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். பொருளாதார நிலை உயரும். மற்றவர்போல் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் தீரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். புதிய இடம் வீடு வாகனம் என வசதியான நிலை உருவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்வீர்கள். வீட்டில் மங்கல ஓசை ஒலிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

பரிகாரம் :லட்சுமி நாராயணரை வழிபட சங்கடம் தீரும். நன்மைகள் உண்டாகும். வாழ்வில் நிம்மதி ஏற்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் சனிப்பெயர்ச்சி பலன்கள் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap