வாசகர்கள் கருத்துகள் (1)
வெட்கம், மானம் அற்ற பிறவிகள்
கன்னட சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்தவர் நடிகர் தர்ஷன். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு கொடுத்ததாக சொல்லப்பட்ட நிலையில் அவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நடிகை பவித்ரா கவுடா உட்பட இன்னும் 15 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு அவர்களும் தற்போது பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இடையில் தர்ஷனுக்கு ஜாமின் வழங்கப்பட்டு பின்னர் சில மாதங்களில் அது நிராகரிக்கப்பட்டு அவர் மீண்டும் சிறைக்கு திரும்பினார்.. அந்த இடைப்பட்ட நாட்களில் ஏற்கனவே கருத்து வேறுபாடு காரணமாக ஒதுங்கி இருந்த தனது மனைவி விஜயலட்சுமியுடன் அவர் மீண்டும் இணைந்துகொண்டார். தவிர இந்த வழக்கை நடத்துவதில் மனைவி விஜயலட்சுமிதான் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் தங்களது 23வது திருமண நாளான நேற்று தனது கணவர் தர்ஷனை மகனுடன் சென்று சிறையில் சந்தித்து அவருடன் உரையாடி அங்கேயே திருமண நாளையும் கொண்டாடியுள்ளார் மனைவி விஜயலட்சுமி. அவர் ஏற்கனவே தனது கணவரை சந்திக்க சிறப்பு அனுமதி கோரியிருந்த நிலையில் சிறை அதிகாரி ஒருவரின் முன்னிலையில் சிசிடிவி கண்காணிப்புக்கு உட்பட்டு அவர்களின் இந்த 30 நிமிட சந்திப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
வெட்கம், மானம் அற்ற பிறவிகள்