ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி
ADDED : 19 hours ago
தமிழில் ‛டிமான்டி காலனி 1 மற்றும் 2, இமைக்கா நொடிகள், கோப்ரா' ஆகிய படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது ‛டிமான்டி காலனி 3'ம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இந்தபடம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் படம் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து அஜய் ஞானமுத்துவின் அடுத்து படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இவர் அடுத்து ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படம் இயக்க போகிறாராம். இதுவும் ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகும் என தெரிகிறது. தற்போது ராகவா, ‛காஞ்சனா 4' படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதுதவிர ‛பென்ஸ்' உள்ளிட்ட ஓரிரு படங்கள் அவர் கைவசம் உள்ளன. இந்த படங்களை எல்லாம் முடித்த பிறகு அஜய் ஞானமுத்து படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.