மகேஷ்பாபு குடும்பத்தினருடன் தியேட்டர் விசிட் அடித்த பிரியங்கா சோப்ரா
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. பிரியங்கா சோப்ரா, மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதாவுடன் நெருங்கிய நட்பில் இருப்பவர் என்பதுடன் அவர்களது மகள் சித்தாராவிடம் ரொம்பவே பிரியம் காட்டுபவர். ஹைதராபாத் வரும்போதெல்லாம் இவர்கள் வீட்டிற்குத் தவறாமல் விசிட் அடிப்பார்.
அந்த வகையில் தற்போது வாரணாசி படப்பிடிப்பில் கிடைத்த இடைவெளியில், ஹைதராபாத்தில் மகேஷ்பாபுவுக்குச் சொந்தமாக உள்ள ஏஎம்பி (AMB) திரையரங்கிற்கு மகேஷ்பாபுவின் மனைவி மற்றும் மகள் சித்தாராவுடன் விசிட் அடித்தார் பிரியங்கா சோப்ரா. அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் பிரியங்கா சோப்ராவுடன் ஆர்வமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.