ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு
புதுமுகங்கள் நடிப்பில், தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வெளியாக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படம் 'யாத்திசை'. இவர் அடுத்து இயக்கும் படத்தில், சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். படத்துக்கு இன்னமும் தலைப்பு வைக்கவில்லை. ஜே.கே. பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்க, பிரம்மாண்டமான பீரியட் டிராமாவாக கதை உருவாகி இருந்தது.
இந்திய தேசிய ராணுவ (INA) அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். சமுத்திரக்கனிக்கும் முக்கியமான வேடம். கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன. சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்திருக்க, சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகி உள்ள இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமாம்.