உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: வில்லனை நண்பன் ஆக்கியதால் தோல்வி அடைந்த ரஜினி படம்

பிளாஷ்பேக்: வில்லனை நண்பன் ஆக்கியதால் தோல்வி அடைந்த ரஜினி படம்


ரஜினி தொடர் வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்தபோது தனது குரு பாலச்சந்தரின் கவிதாலயா பேனரில் நடித்த படம் 'சிவா'. அமிதாப் பச்சன் மற்றும் வினோத் கன்னா நடித்து, 1977ம் ஆண்டு வெளியான வெற்றிப் படமான 'கூன் பசினா'வின் ரீமேக். ரஜினியுடன், ரகுவரன், சௌகார் ஜானகி, ஷோபனா, வினு சக்ரவர்த்தி, ஜனகராஜ், ராதாரவி, சார்லி, மாதுரி, டிஸ்கோ சாந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.பாலச்சந்தரின் உதவியாளர் அமீர்ஜான் இயக்கி இருந்தார்.

ரஜினியும், ரகுவரனும் சிறுவயது நண்பர்கள். வில்லன்களின் அட்டூழியத்தால் இருவரும் வெவ்வேறு திசைகளுக்கு பிரிகிறார்கள். ரகுவரன் கொடூர தாதாவாக வளர்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் நண்பன் ரஜினிக்கு எதிரியாகிறார். ரஜினியை கொல்ல முயற்சிக்கிறார். அப்போது ரஜினி தனது பால்ய நண்பன் என்பதை அறிந்து கொண்டு. பின்னர் இருவரும் மீண்டும் நண்பர்களாகி முக்கிய வில்லனை எதிர்த்து போரிடுவது மாதிரியான கதை.

ரகுவரன் ஏற்கெனவே வில்லனாக தொடர்ந்து நடித்து வந்ததால் இந்த படத்தில் அவர் ரஜினியின் நண்பனாக நடித்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை. அதனால் படம் தோல்வியை தழுவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !