உலக டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் 'டிசி'
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், அனிருத் இசையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக, வாமிகா கபி நாயகியாக நடிக்கும் படம் 'டிசி'. இப்படத்தின் 'ராகா ஆப் ரிவெஞ்ச்' என்ற டிராக் பத்து நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. வெளியானதிலிருந்தே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தற்போது 'ஸ்போட்டிபை' ஆன்லைன் தளத்தில், மே 22 முதல் மே 24 வரையிலான, உலக அளவிலான டாப் 10 பாடல்கள் பட்டியலில் இந்த டிராக் 6வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு மாநில மொழித் திரைப்படத்தின் பாடல் இந்த அளவிற்கு உலக அளவிலான டாப் 10ல் இடம் பிடிப்பது ஆச்சரியம்தான்.
இது குறித்து அனிருத், “ஒரு இந்திய பிராந்திய மொழிப் பாடலை, இவ்வளவு பிரம்மாண்டமான உயரத்திற்கு எடுத்துச் சென்றது நீங்கள்தான்.
நமது வேர்களிலிருந்து உலக மேடை வரை….இந்த வெற்றி உங்கள் அனைவருக்கும் சொந்தமானது,” என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.