பிளாஷ்பேக்: திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய படம்
திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய படம் என்றால் 'ஊமை விழிகள்' படம்தான் நினைவுக்கு வரும், அந்த படத்தை தயாரித்த ஆபாவாணன், இயக்கிய அரவிந்தராஜ், ஒளிப்பதிவாளர் ரமேஷ்குமார் பிற்காலத்தில் தங்கள் துறைகளில் சாதித்தார்கள்.
ஆனால் அதற்கு பிறகு திரைப்படக்கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய படம் 'வெற்றி மேல் வெற்றி'. ஆனால் இந்த படம் 'ஊமை விழிகள்' அளவிற்கு பேசப்படவில்லை. காரணம் இது தோல்வி படமாக அமைந்தது. இந்த படத்தை இயக்கிய எம்.தியாகராஜன், ஒளிப்பதிவாளர் சிவா, எடிட்டர் ஜெயச்சந்திரன் என அனைவருமே திரைப்டக்கல்லூரி மாணவர்கள்தான். 6 துணை இயக்குனர்களும் திரைப்படக் கல்லூரி மாணவர்கள்தான்.
இந்த படத்தில் பிரபு, சீதா, எஸ்.எஸ்.சந்திரன், நாசர், ஆனந்தராஜ், மனோரமா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் பிரபு குத்துச் சண்டை வீரராக நடித்திருந்தார். அவரது குருவாக நிஜ குத்துச் சண்டை சாம்பியன் தாரா சிங் நடித்திருந்தார். விஜய் ஆனந்த் இசை அமைத்திருந்தார்.