உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'விக்ரம் 63' படப்பிடிப்பு திட்டமிட்ட காலத்திற்குள் முடியும் : இயக்குநர் உறுதி

'விக்ரம் 63' படப்பிடிப்பு திட்டமிட்ட காலத்திற்குள் முடியும் : இயக்குநர் உறுதி

விக்ரம் நடிக்கும் 63வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கின்றனர். விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார். எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணுஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

இதுகுறித்து ஆனந்த் சங்கர் கூறும்போது “முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். விக்ரமின் தனித்துவமான திரைப்பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக இது இருக்கும். அனைவரையும் கவரும் பேமிலி திரில்லர் ஆக் ஷன் கதை” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !