உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் கிராமிய கதையில் ஜீவா

மீண்டும் கிராமிய கதையில் ஜீவா

ஜீவா நடிப்பில் கிராமிய பின்னணியில் உருவான 'தலைவர் தம்பி தலைமையில்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் அடுத்தும் ஒரு கிராமிய பின்னணி கதையில் நடிக்கிறார். இந்தப் படத்தை 'கிடா' படத்தின் இயக்குநர் ரா.வெங்கட் இயக்குகிறார். கே. குமார் தயாரிக்கிறார். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அப்பா - மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது. குடும்ப உறவுகளின் ஆழத்தையும், வாழ்க்கையின் நுணுக்கமான உணர்வுகளையும் பேசும் இந்தக் கதை, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்த படம், ஜீவாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படைப்பாக அமையும் . கதை நாயகி உள்ளிட்ட மற்ற கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !