வாசகர்கள் கருத்துகள் (1)
படத்தின் highlight வில்லன் சலீம் கௌசின் அதிரடியான நடிப்பும் குரலும்... அவருடைய பேரை மறந்துட்டீஙகளே..
கமல், பிரபு இணைந்து நடித்த படம் 'வெற்றி விழா'. பிரதாப் போத்தன் இயக்கத்தில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்தது. இந்தப் படத்தில், அமலா, சசிகலா, குஷ்பு, ராதாரவி, அபிலாஷா, டிஸ்கோ சாந்தி, ஜனகராஜ், சின்னி ஜெயந்த், வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.சந்திரன், மயில்சாமி, சவுகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். நாயகன், பேசும்படம், சத்யா, சூரசம்ஹாரம், உன்னால் முடியும் தம்பி, அபூர்வ சகோதரர்கள் என வித்தியாசமான கதைகள், கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்த கமல் சிறிய இடைவெளிக்கு பிறகு நடித்த பக்கா கமர்ஷியல் படம்.
இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன. 'மாறுகோ மாறுகோ...' 'பூங்காற்று உன் பேர் சொல்ல...' 'சீவி சிணுக்கெடுத்து...', 'வானம் என்ன கீழிருக்கு பூமியென்ன மேலிருக்கு'ஆகியவை இன்றைக்கும் அனைவராலும் விரும்பும் பாடலாக இருக்கிறது.
பிரபு கமலுடன் இணைந்து நடித்த முதல் படம் இது, இதன்பிறகு 15 ஆண்டுகள் கழித்து 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் கமலுடன் இணைந்து நடித்தார். இரண்டு படங்களிலுமே கமல்ஹாசனின் நண்பனாக நடித்தார் பிரபு. இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. சிவாஜி குடும்பத்திற்கு மிக நெருக்கமாக இருந்த கமலுடன் சிவாஜி மகன் பிரபு இரண்டு படங்களில் மட்டுமே இணைந்து நடித்தது ஆச்சர்யமான ஒன்று.
படத்தின் highlight வில்லன் சலீம் கௌசின் அதிரடியான நடிப்பும் குரலும்... அவருடைய பேரை மறந்துட்டீஙகளே..