உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 75 மில்லியன் நிமிடப் பார்வைகளைப் பெற்ற 'லீடர்'

75 மில்லியன் நிமிடப் பார்வைகளைப் பெற்ற 'லீடர்'


துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், ஆண்ட்ரியா, ஷாம், பாயல் ராஜ்புத் மற்றும் பல நடித்த 'லீடர்' படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியானது. அதன்பின் இப்படம் ஓடிடி தளத்தில் மே 29 அன்று வெளியானது.

கடந்த இரண்டு வாரங்களில் இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் 75 மில்லியன் நிமிடப் பார்வைகளைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தியேட்டர் வரவேற்பில் சுமாராக இருந்தாலும் ஓடிடி வரவேற்பில் இப்படம் நிறைய ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இப்படத்தைப் பார்த்த பல ரசிகர்கள் தற்போது ஓடிடி தளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

தேர்தல் பிரசாரப் பரபரப்பில் இப்படத்தின் தியேட்டர் வெளியீடு இருந்தது. தேர்தல் முடிந்த பிறகோ, பிரசாரங்களுக்கு முன்போ வந்திருந்தால் நல்ல வசூலையும் பெற்றிருக்கலாம் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !