உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி, அஷ்வத் படப்பிடிப்பு தொடங்கியது : ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது

ரஜினி, அஷ்வத் படப்பிடிப்பு தொடங்கியது : ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது உறுதியாகிவிட்டது. ரஜினிகாந்த் 5 ரூபாய் டாக்டராக நடிப்பதாகவும் தகவல். சமீபத்தில் அவர் சம்பந்தப்பட்ட போட்டோசெஷன் நடந்தது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் சென்னையில் தொடங்கிவிட்டதாம். ஆனால், அதில் ரஜினி பங்கேற்றவில்லை. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு பிரமாண்ட படப்பிடிப்புடன் தொடங்க உள்ளது. இப்போது மற்றவர்கள் நடிக்கும் காட்சிகளை அஷ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறாராம்.

இந்த படத்தின் தலைப்பில் டாக்டர் என்ற வார்த்தை இருக்கலாம் என்று தகவல். ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பதும் கேள்வியாக உள்ளது. ரஜினி மகனாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையில், ஜெயிலர் 2 பட ரிலீசில் இன்னமும் குழப்பம் நீடிக்கிறதாம். ஆகஸ்ட் மாதம் வரலாம் என அவர்கள் நினைத்திருந்த வேளையில், ஆகஸ்ட் 26ம் தேதி யஷ் நடித்த டாக்சிக் வருகிறது. அதனால், தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகாவில், வட இந்தியாவில் ஜெயிலர் 2 படத்துக்கு அதிக தியேட்டர் கிடைக்காத நிலை வரலாம். ஆகவே, படம் தீபாவளிக்கு தள்ளிப்போகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !