உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராம்சரணுக்கு செல்லப்பெயர் வைத்து அழைக்கும் அவரது மூன்று வயது மகள்

ராம்சரணுக்கு செல்லப்பெயர் வைத்து அழைக்கும் அவரது மூன்று வயது மகள்


தெலுங்கு நடிகர் ராம்சரண், உபாசனா தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியமாகக் கிடைத்தவர் தான் அவரது மகள் கிளின் காரா. இவரது முகத்தையே சமீபத்திய மூன்றாவது பிறந்த நாளில்தான் ரசிகர்களுக்கு ராம்சரண் தம்பதியினர் வெளிப்படுத்தினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ராம்சரண் நடிப்பில் புச்சிபாபு சனா இயக்கத்தில் பெத்தி திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியும் பெற்றுள்ளது.

இந்த படம் வெளியான பிறகு தற்போது ராம்சரண் மகள் அவரை பெத்தி என்று செல்லப் பெயரிட்டு கூப்பிட ஆரம்பித்துள்ளாராம். என் படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தின் பெயர் என் மகளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இப்போது அவர் என்னை பெத்தி என்றுதான் கூப்பிடுகிறாள்.. எனது மகளே அந்தப் படத்தின் கதாபாத்திரத்தின் பெயரையே எனக்கு செல்லப் பெயராக வைத்திருப்பது அந்தப் படத்தின் வெற்றியை எனது வீட்டுக்குள்ளும் உணர வைப்பதாக ராம்சரண் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !