உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஜானர் மாறும் ; 'ஐ நோ படி' படம் குறித்து பிரித்விராஜ் வியப்பு

ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஜானர் மாறும் ; 'ஐ நோ படி' படம் குறித்து பிரித்விராஜ் வியப்பு


பிரித்விராஜ் நடிப்பில் அடுத்ததாக மலையாளத்தில் உருவாகியுள்ள 'ஐ நோ படி' திரைப்படம் ஜூலை ஒன்பதாம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதில் கதாநாயகியாக நடிகை பார்வதி நடித்துள்ளார். மம்முட்டி நடித்த 'ரோசாக்' படத்தை இயக்கிய நிசாம் பஷீர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் சாதாரண ஊழியன் பார்க்கக்கூடாத ஒன்றை எதிர்பாராத விதமாக நேரில் பார்த்து விடுகிறான். அதனைத் தொடர்ந்து அவனது வாழ்க்கை முழுமையாக மாறுகிறது. இந்தச் சிக்கல்களுக்கு எல்லாம் அவன்தான் காரணமா? அல்லது சூழ்நிலைகளால் அவன் சிக்கிக் கொள்கிறானா? என்பதுதான் படத்தின் மையக்கருவாகச் சொல்லப்படுகிறதாம்.

இந்த படம் குறித்து சமீபத்தில் பிரித்விராஜ் கூறும்போது, இது ஒரு குறிப்பிட்ட ஜானரைச் சேர்ந்த படம் என்று சொல்ல முடியாது. காரணம் கதையை முதன் முதலில் கேட்டபோது ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் படத்தின் ஜானர் மாறிக்கொண்டே இருப்பது போல உணர்ந்தேன். நாம் இதுவரை பார்த்த பல வகை கதைகளில் முற்றிலும் ஒரு புதிய முறையில் இதை கொடுத்துள்ளார்கள். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஏராளமாக இருந்தாலும், இதை வெறும் ஆக்ஷன் படம் என்று வகைப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

புகழ்பெற்ற பிரெஞ்ச் சண்டைப் பயிற்சி யானிக் பென் கைவண்ணத்தில் இந்தப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்காக நிறைய நேரமும் பட்ஜெட்டும் செலவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !