உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவன் கல்யாணுக்காக எந்த வேடத்திலும் நடிக்கத் தயார் ; அர்ஜுன் தாஸ் ஆர்வம்

பவன் கல்யாணுக்காக எந்த வேடத்திலும் நடிக்கத் தயார் ; அர்ஜுன் தாஸ் ஆர்வம்


'கைதி', 'மாஸ்டர்' படங்கள் மூலம் மிரட்டலாக வில்லன் நடிகராக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அர்ஜுன் தாஸ். அதனைத் தொடர்ந்து 'அநீதி', 'ரசவாதம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த இவர், விரைவில் வெளியாக இருக்கும் 'கான் சிட்டி' என்கிற படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் விரைவில் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் தயாராக இருப்பதாகச் சொல்லப்படும் 'ஓ ஜி' படத்தின் இரண்டாம் பாகத்திலும் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார் என்று ஒரு தகவல் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இந்த தகவல் குறித்து அர்ஜுன் தாஸ் கூறும்போது, நான் 'ஓ ஜி 2'-வில் இருப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் பவன் கல்யாண் சார் அல்லது அந்தத் தயாரிப்பு தரப்பிலிருந்து எனக்கு வாய்ப்பு வந்தால், நான் மறுக்காமல் நிச்சயமாக நடிப்பேன். அது எந்த வேடமாக இருந்தாலும்.. என்று கூறியுள்ளார். பவன் கல்யாணை 'அன்னையா' என்று அன்புடன் அழைக்கும் அர்ஜுன் தாஸ், அவரிடமிருந்து எப்போது அழைப்பு வந்தாலும் தான் உடனடியாகச் செல்வதற்குத் தயார் என்று அவர் மீதான மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !