உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கில் சாதனை படைத்த சமந்தா படம்

தெலுங்கில் சாதனை படைத்த சமந்தா படம்

ஒரு காலத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகளுக்குத் திருமணம் நடந்துவிட்டால் அதன்பிறகு அவர்களை கதாநாயகிகளாக நடிக்கக் கூப்பிட மாட்டார்கள். அக்கா, அண்ணி வேடங்களில் மட்டும்தான் நடிக்கக் கூப்பிடுவார்கள். ஆனால், தற்போது காலம் மாறிவிட்டது.

திருமணம் நடந்த பின்பும் சரி, குழந்தை பெற்ற பின்பும் சரி அவர்கள் கதாநாயகிகளாகவே தொடர்ந்து நடித்து வருகிறார்கள். அப்படியான சாதனைகளை கடந்த சில வருடங்களாக சில நடிகைகள் படைத்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் திருமணம் நடந்த பின்பு தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்து வருபவர் சமந்தா. தெலுங்கில் அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த 'மா இன்ட்டி பங்காரம்' படம் 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. தற்போதைய சூழலில் 40 கோடிக்கும் மேல் ஷேர், 30 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்துள்ளதாம்.

தெலுங்கில் கதாநாயகிகள் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த படங்களில் வேறு எந்த ஒரு நடிகையும் பெறாத வசூலை சமந்தா பெற்றுள்ளார். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த வருடத்தில் தெலுங்கில் சில முன்னணி நடிகர்களின் படங்களே தடுமாறிய நிலையில் சமந்தாவின் இந்த சாதனை மற்ற கதாநாயகிகளுக்கும் சந்தோஷத்தைத் தந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !