உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எம்எல்ஏ விடுதியில் குடியேறிய பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் ராஜ்மோகன்

எம்எல்ஏ விடுதியில் குடியேறிய பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் ராஜ்மோகன்


நடிகர் வடிவேலுவுடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமானவர் நடிகர் பாவா லட்சுமணன். இவர் சமீப காலமாக நோய்வாய்ப்பட்டு கடுமையான உடல் நல பிரச்னையால் தவித்து வந்தார். இதனால் சினிமாவில் நடிப்பதிலிருந்தும் விலகினார். அவரது உடல்நிலை மோசமாகி உள்ளதாக தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்திருந்தார். அதில், நீரழிவு நோயின் தீவிர தாக்கத்தினால் அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், வீட்டு வாடகை கட்டவும், மருத்துவ செலவுகளுக்கும் கூட பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து நடிகர் கூல் சுரேஷ் அவருக்கு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்து வீட்டு உபயோக பொருட்களும் வாங்கி கொடுத்தார். நடிகர் ஜீவா, டிவி நடிகர் பாலாவும் உதவி செய்தனர்; நடிகர் லெஜெண்ட் சரவணன் ரூ.2 லட்சம் வழங்கி உதவி செய்தார்.

இந்த நிலையில் பாவா லட்சுமணன், தற்போது எம்எல்ஏ.,க்கள் தங்கும் விடுதியில் குடியேறியதாக செய்தி வெளியானது. இது பற்றி பாவா லட்சுமணனிடம் கேட்டதற்கு, ''கடந்த 2 நாட்களாக எம்எல்ஏ., விடுதியில் தங்கியுள்ளேன். அமைச்சர் ராஜ்மோகன் தான் என்னை தங்க வைத்தார். விரைவில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

JeevaKiran, COONOOR
2026-07-03 10:43:59

நடிக்கும் போது இவர்களுக்கு எல்லாம் குறைந்த சம்பளம் கொடுத்துவிட்டு, முழுசையும் ஆட்டை போட்ட வடிவேல்தான் உதவனும்.