உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மஞ்சும்மல் பாய்ஸ்' சிதம்பரத்துக்கு கால்ஷீட் கொடுப்பாரா தனுஷ்?

'மஞ்சும்மல் பாய்ஸ்' சிதம்பரத்துக்கு கால்ஷீட் கொடுப்பாரா தனுஷ்?


'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தை இயக்கிய சிதம்பரத்தின் அடுத்த படம் 'பாலன்'. தமிழ், மலையாளத்தில் சமீபத்தில் வெளியான இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக ஓரளவு வரவேற்பு கிடைத்தது. ஆனால், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில், பல முன்னணி கலைஞர்கள், இயக்குனர்களுக்கு தனியாக படம் போட்டு காண்பித்து வருகிறார். அந்தவகையில் படம் பார்த்த இயக்குனர் மணிரத்னம் 'திரைப்படம் மிகவும் நன்றாக இருந்தது. அதன் எழுத்து வடிவம் (திரைக்கதை) சிறப்பாக அமைந்திருந்தது, மேலும் அனைவரும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். ஒட்டுமொத்தத்தில், இது ஒரு சிறந்த திரைப்படமாகும். என்று பாராட்டியிருக்கிறார்.

மஞ்சும்மல் பாய்ஸ் வெற்றி அடைந்த சமயத்தில் இயக்குனர் சிதம்பரத்தை அழைத்து பாராட்டினார் தனுஷ். அவருடன் படம் பண்ண விரும்புவதாக தெரிவித்தார். ஆனால், கால்ஷீட் பிஸி, வேறு சில விஷயங்களால் பாலன் படத்தை இயக்கினார் சிதம்பரம். இப்போது அவர் தனுஷ் படத்தை இயக்க ரெடி. ஆனால் சில ஆண்டுகள் தனுஷ் பிஸியாக இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !