வாசகர்கள் கருத்துகள் (1)
இப்போவே சொல்றேன் கேட்டுக்கோங்க .. அப்புறம் சொல்லல னு என் கிட்ட சொல்லாதீங்க..
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படம் அக்டோபர் 15ம் தேதியன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதிக்காகத் திரையுலகினரும் ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள்.
தற்போது படத்திற்கான சரியான ஒரு தேதியைத் தேர்வு செய்துள்ளார்கள். அக்டோபர் 19ம் தேதியன்று ஆயுத பூஜை, அக்டோபர் 20ம் தேதியன்று விஜய தசமி என அரசு விடுமுறை நாட்கள். படம் அக்டோபர் 15 வெளியாவதால் அன்றைய தினமும், மறுநாள் அக்டோபர் 16ம் தேதியும் ரஜினி ரசிகர்கள் படத்தை முதலில் பார்க்க ஆசைப்பட்டு முன்பதிவு செய்து விடுவார்கள்.
அதற்கடுத்து அக்டோபர் 17 சனி மற்றும் அக்டோபர் 19 ஞாயிறு வழக்கமான வார விடுமுறை நாட்கள். எனவே, தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால் குடும்பத்துடன் படம் பார்ப்பவர்கள் தியேட்டர் பக்கம் வருவார்கள்.
2023ல் வெளிவந்த 'ஜெயிலர்' படத்தின் முதல் பாகம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்தப் படம் அதையும் கடந்து 1000 கோடியை வசூலிக்குமா என திரையுலகில் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்போவே சொல்றேன் கேட்டுக்கோங்க .. அப்புறம் சொல்லல னு என் கிட்ட சொல்லாதீங்க..