உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் பெயரை காப்பாற்றி விட்டாய் : அர்ஜுன் தாஸுக்கு லோகேஷ் கனகராஜ் பாராட்டு

என் பெயரை காப்பாற்றி விட்டாய் : அர்ஜுன் தாஸுக்கு லோகேஷ் கனகராஜ் பாராட்டு

கைதி படத்தில் வில்லன் நடிகராக அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து, தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் அர்ஜுன் தாஸ். சமீபத்தில் இவர் கதாநாயகனாக நடித்த 'கான் சிட்டி' திரைப்படம் வெளியாகியுள்ளது. சூழல் காரணமாக மக்கள் பணத்தை மோசடி செய்யும் மூவரைப் பற்றிய கதையாக 'சதுரங்க வேட்டை' பட பாணியில் உருவாகியுள்ளது.. படத்திற்கு ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் படம் பார்த்துவிட்டு அர்ஜுன் தாஸை பாராட்டியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கைதி படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திய லோகேஷ் கனகராஜைத்தான் தனது குரு, வழிகாட்டி என கருதுகிறார் அர்ஜுன் தாஸ். இந்நிலையில், சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த லோகேஷ் கனகராஜ், நீ என்னை பெருமைப்படுத்தி விட்டாய் என்று கூறியதுடன், குடும்பத்தினர் அனைவரும் வந்து ரசிக்கும் வகையில் படம் அமைந்திருப்பதையும் அவர் பாராட்டியுள்ளாராம். இந்த தகவலை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ள அர்ஜுன் தாஸ், இந்த வெற்றி லோகேஷ் கனகராஜுக்கு சமர்ப்பணம் என்றும் கூறியுள்ளார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !