உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உடை விமர்சனத்திற்கு பதிலளித்த மாளவிகா மோகனன்!

உடை விமர்சனத்திற்கு பதிலளித்த மாளவிகா மோகனன்!


நடிகை மாளவிகா மோகனன் மலையாள சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன் பின்னர் தமிழில் 'பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் கைவசமாக 'சர்தார் 2, பாக்கெட் நாவல்' உள்ளிட்ட படங்கள் உள்ளது. அவ்வப்போது மாளவிகா மோகனன் கொஞ்சம் கிளாமர் ஆக போட்டோ ஷூட் செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொள்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கடற்கரையில் பிகினி உடையுடன் உள்ள போட்டோக்களை பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன்.

இந்த நிலையில் மாளவிகா மோகனன், எல்லை மீறாத கவர்ச்சி எது என்பது எங்களுக்கு தெரியும். பிகினி அணிவதில் என்ன தவறு? வெளிநாடுகளில் நீச்சல் உடை அணிவது மிகவும் சாதாரணமான விஷயம். அதே நேரத்தில், நமது பண்பாடு மற்றும் கலாசாரத்தை மதிக்கவும் எங்களுக்கு தெரியும். எல்லை மீறாத கவர்ச்சி எது என்பது நடிகைகளுக்குத் தெரியும். எனவே எளிதாக யாரையும் விமர்சிக்காதீர்கள். என உடைத் தேர்வு குறித்து விமர்சனங்களுக்கு மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார் என்கிற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !