தெலுங்கு இயக்குனர் உடன் கைகோர்க்கும் ஹிர்த்திக் ரோஷன்!
ADDED : 1 days ago
தெலுங்கில் 'கீதா கோவிந்தம், சர்காரு வாரி பட்டா, பேமிலி ஸ்டார்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பரசுராம் பெட்லா. 'பேமிலி ஸ்டார்' படத்தின் தோல்விக்கு பிறகு பரசுராம் பற்றி பெரிதாக எந்தவொரு தகவலும் இல்லை.
இந்த நிலையில் பரசுராம் பெட்லா அடுத்து பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷனை வைத்து தான் புதிய படம் இயக்கவுள்ளார். இந்த படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே ஹிர்த்திக் ரோஷனை வைத்து ஹோம்பாலே நிறுவனம் மூன்று படங்கள் தயாரிப்பதாக கடந்த ஆண்டில் அறிவித்தனர். அதில் ஒரு படமாக இப்படம் உருவாகிறது என கூறப்படுகிறது.