250 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்ட 'ராமாயணா'
ADDED : 2 hours ago
நிதிஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகும் படம் 'ராமாயணா'. இப்படத்தின் முதல் பாகம் இந்த வருடம் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் 30 நிமிடக் காட்சிகளைத் தொகுத்து அதை திரையிட்டு படத்தின் வியாபாரத்தைப் பேசியுள்ளனர். சில முன்னணி நிறுவனங்கள் அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன.
இந்திய வெளியீட்டு உரிமை சுமார் 500 கோடி என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டதாம். ஆனால், கடைசியில் 250 கோடிக்கு பிரபல இயக்குனர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர் கரண் ஜோஹரின் நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
வெளிநாட்டு வினியோக உரிமையை பிரபல வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் எனத் தெரிகிறது.