உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கட்டா குஸ்திக்காக வேறு படங்களில் நடிக்கவில்லை : ‛மீனு மிஸ்' மோக்ஷா

கட்டா குஸ்திக்காக வேறு படங்களில் நடிக்கவில்லை : ‛மீனு மிஸ்' மோக்ஷா

சமீபத்தில் வெளியான 'கட்டா குஸ்தி' படத்தில் வந்த 'மீனு மிஸ்' மோக்ஷா தான் இப்போது சினிமாவின் ஹாட் டாபிக். கே.பாக்யராஜ் படத்தில் வரும் அந்த அழகான கிளாமர் டீச்சரை பார்த்த ரசிகர்கள் இப்போது இவரை பார்த்து ஆச்சர்யப்பட்டு நிற்கிறார்கள். ஒரு ஹீரோயினுக்கான லுக் இருந்தும் ஏன் கிளாமர் மற்றும் காமெடி வேடத்தில் நடித்தார் என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஆனால் மோக்ஷாவுக்கு இது முதல் தமிழ் படமல்ல ஏற்கெனவே ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் டிராப் ஆகிவிட்டது. கொல்கத்தாவை சேர்ந்த இவர் பெங்காலி படங்களில் நடித்து வந்தார். சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 'கட்டா குஸ்தி 2' மூலம் தமிழுக்கு வந்துள்ளார். கவர்ச்சி நடிகையாக தொடர்வாரா? அல்லது நாயகியாக நடிப்பாரா என்று தெரியவில்லை,

கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறியதாவது: ''கட்டா குஸ்தி 2' திரைப்படம் இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. தமிழ் சினிமா ரசிகர்கள் என் மீது இவ்வளவு அன்பைப் பொழிவார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. ஒரே இரவில் மோக்ஷாவாக இருந்த என்னை 'மீனு மிஸ்' என்ற கதாபாத்திரமாக மாற்றி, இந்த அளவிற்கு பிரபலமாக்கியது இன்னும் என் கற்பனைக்கும் சிந்தனைக்கும் எட்டாத ஒன்றாகவே இருக்கிறது.

வழக்கமாக எல்லா தயாரிப்பாளர்களும், இந்தப் படத்தை நீ பண்ணு, அப்புறம் பார் என்ன நடக்குதுன்னு என்றுதான் சொல்வார்கள். அப்படி விஷ்ணு விஷால் சொன்னதை நான் முழுமையாக நம்பினேன். அவருக்காக நான் வேறு எந்தத் தமிழ் படங்களையும் ஒப்புக் கொள்ளாமல் இந்த ரோலுக்காக காத்திருந்தேன். இந்தியாவின் மிகப்பெரிய சினிமாத்துறையான தமிழ் சினிமாவில் நுழைவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால், இன்று முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்ததை ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்.

தமிழ் மக்கள் கொடுத்த ஆதரவிற்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அதேபோல், இப்படத்தில் நான் ஒரு மலையாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால், கேரளா மண்ணிற்கும் என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமா ஊடகங்களுக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இன்னும் பல நல்ல படங்கள் பண்ணக் காத்திருக்கிறேன். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !