உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமாவுக்கு வந்த வில்லுப்பாட்டு மாதவி

சினிமாவுக்கு வந்த வில்லுப்பாட்டு மாதவி

யு டியூப் மற்றும் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் வில்லுப்பாட்டு மாதவி. இளம் கிராம பெண்ணின் தோற்றம், மென்மையான குரல் இவற்றால் பிரபலமானார். இவர் சினிமாவுக்கு வருகிறார். ஜிப்ரான் இசை அமைக்கும் 'வேட்டசாமி' படத்தில் பாடகியாக அறிமுமாகிறார். அதோடு கோவில் விழாவில் வில்லுப்பாட்டு கச்சேரி நடக்கும் காட்சியில் மாதவியாகவே தோன்றவும் செய்கிறார். ஜிப்ரான் இசையில் அவர் பாடிய 'சுடலைமாடன் வேட்டைப்பாடல்' பாடல், சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

இந்த படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனத்தின் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் தமிழ், விஜி சந்திரசேகர், 'ஆடுகளம்' நரேன், அர்ஜெய், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி, நந்தினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'பம்பர்' திரைப்படத்தை இயக்கிய எம்.செல்வகுமார் இயக்கியுள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !