சாய் பல்லவியின் ஏக் தின் வெளிநாடுகளில் மட்டும் ஓடிடியில் வெளியாகிறது
ADDED : 10 hours ago
ஹிந்தியில் ராமாயணா, தமிழில் ஓம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. கடைசியாக பாலிவுட்டில் ஜுனைத் கானுக்கு ஜோடியாக அவர் நடித்த காதல் படமான ஏக் தின் கடந்த மே மாதம் வெளியானது. இப்படத்தை அமீர் கான் புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. 25 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் 5 கோடி மட்டுமே வசூலித்தது. இந்த படம், ஒன் டே என்ற தாய்லாந்து படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.
பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்த இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஜூலை 16ஆம் தேதியான நாளை வெளியாக உள்ளது. என்றாலும் இந்தியாவில் இந்த படத்தை பார்க்க முடியாது. வெளிநாட்டு பார்வையாளர்கள் மட்டுமே இப்போதைக்கு பார்க்க முடியுமாம். அதோடு இந்த படத்தை சர்வதேச பார்வையாளர்களுக்காக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள்.