உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''தளபதி வந்தா தள்ளிப்போய் தானே ஆகணும்...'': 'இம்மார்டல்' ரிலீஸை தள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ்

''தளபதி வந்தா தள்ளிப்போய் தானே ஆகணும்...'': 'இம்மார்டல்' ரிலீஸை தள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ்


‛ஹேப்பி ராஜ்' படத்திற்கு பின்னர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛இம்மார்டல்'. அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். புதுமுகம் மாரியப்பன் சின்னா இயக்க, சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

ஜிவி பிரகாஷ், கயாடு இடையேயான காதலும் அதற்கிடையே ஒரு வீட்டில் நடக்கும் ஹாரர் திரில்லர் தான் படத்தின் கதை. காதல் கலந்த ஹாரர் திரில்லராக உருவாகி உள்ள இப்படத்தின் டீசர் ஏற்கனவே ரிலீசாகி வரவேற்பை பெற்ற நிலையில் ஜூலை 23ல் படம் ரிலீசாகும் என அறிவித்தனர். ஆனால், அதே தேதியில் நடிகரும், முதல்வருமான விஜய் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்' படம் ரிலீசாவதாக அறிவித்தனர். இதனால் 'இம்மார்டல்' படத்தின் ரிலீஸை செப்டம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ், ''தளபதி வந்தா தள்ளிப்போய் தானே ஆகணும்.. அதுவும் ஒன் லாஸ்ட் டைம்.. ஜனநாயகன் குழுவுக்கு வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !