உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அன்பே டயானாவுக்கு வரவேற்பு : ஆனால், ஜனநாயகனால் சிக்கல்

அன்பே டயானாவுக்கு வரவேற்பு : ஆனால், ஜனநாயகனால் சிக்கல்

ஜமா படத்தை இயக்கிய பாரி இளவழகனின் அடுத்த படம் ‛அன்பே டயானா'. அவரே இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். பெரம்பூர் பையனுக்கும், ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்ணுக்குமான காதலை சொல்லும் கதை. ஹீரோ அப்பாவாக சேத்தன், அம்மாவாக ரோஜா, காதலியாக ரம்யா நடித்துள்ளனர். படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பிரபலங்கள் படத்தை பாராட்டியுள்ளனர்.

நாளை படம் ரிலீஸ். படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் படக்குழு கவலையில் இருக்கிறதாம். காரணம், ஜூலை 23ல் தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. அந்த படத்துக்கான வரவேற்பு பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் ஜனநாயகன் ஓட வாய்ப்பு. அப்போது திரையில் ஓடிக் கொண்டிருக்கும் படங்களை துாக்க வேண்டிய நிலை, மிகக்குறைவான திரைகள் மட்டும் கிடைக்கும். நாளை அன்பே டயானா ரிலீஸ் ஆனாலும், பிக்அப் ஆக சில நாட்கள் ஆகும். அடுத்த வாரம் தான் கூட்டம் வர ஆரம்பிக்கும். அதற்குள் ஜூலை 23ல் ஜனநாயகன் வருவதால் படத்துக்கு தியேட்டர்கள் குறையும் அல்லது பல இடங்களில் துாக்க வேண்டிய நிலை. சில நாட்கள் மட்டுமே படம் ஓடினால் எப்படி வசூல் வரும். என்ன செய்வது என படக்குழு தத்தளிக்கிறதாம். அந்த படத்தை பார்க்க வருபவர்கள், இந்த படத்துக்கும் வர வேண்டும்.

நான் நடித்த ஜமா படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், தியேட்டரில் ஓடவில்லை. பத்து ஆண்டுகளுக்கு மேலாக கஷ்டப்பட்டு, போராடி இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன். அன்பே டயானா படத்துக்கும் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன் என உருகுகிறார் ஹீரோ கம் இயக்குனரான பாரி இளவழகன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !