உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛டிசி'க்கு ‛ஏ' சான்று : ஆக., 7க்கு படம் தள்ளிவைப்பு

‛டிசி'க்கு ‛ஏ' சான்று : ஆக., 7க்கு படம் தள்ளிவைப்பு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக களமிறங்கி உள்ள படம் ‛டிசி'. அருண் மாதேவஸ்வரன் இயக்கி உள்ளார். நாயகியாக வாமிகா கபி நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலை நடக்கிறது. ஆக் ஷன் உடன் கூடிய ஒரு காதலும் இந்த படத்தில் உள்ளது. ஏற்கனவே படத்தின் ரத்தம் தெறிக்கும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. முன்னதாக இந்த படம் ஜூலை 31ல் ரிலீஸ் என அறிவித்து இருந்தனர்.

தணிக்கை அனுப்பப்பட்ட இப்படம் ‛ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது. அதோடு ரிலீஸ் தேதியையும் ஆக., 7ம் தேதிக்கு மாற்றி உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை போஸ்டர் உடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

முதல்வர் விஜயின் கடைசி படமான ‛ஜனநாயகன்' 6 மாதம் தாமதத்திற்கு பிறகு அடுத்தவாரம் ஜூலை 23ல் ரிலீஸாகிறது. பொதுவாக முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகும் போது ஒருவாரத்திற்கு முன்னரும், பின்னரும் மற்ற படங்களை திரையிட மாட்டார்கள். ஜனநாயகன் படம் கண்டிப்பாக பல தியேட்டர்களில் 2வது வாரத்தையும் கடந்து ஓடும் என்பதால் அந்த சமயம் தங்களுக்கு போதிய தியேட்டர் கிடைக்காது என்பதால் டிசி ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர். இந்தப்படம் மட்டுமல்ல நாளை வெளியாகும் அர்ஜூனன் பேர் பத்து, டார்க் ஹெவன், அடுத்தவாரம் வெளியாக இருந்த ஜிவி பிரகாஷின் இம்மார்டல் ஆகிய படங்களும் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.







தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !