உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிச.,3ல் பிரபாஸின் 'பெளசி' ரிலீஸ்

டிச.,3ல் பிரபாஸின் 'பெளசி' ரிலீஸ்


தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' படத்திற்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உருவெடுத்தார். தற்போது 'சீதா ராமம்' பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 'பெளசி' என்ற படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மிதுன் சக்ரவர்த்தி, ஜெயபிரதா, சைத்ரா ஜே ஆச்சார் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிவரும் இப்படம் அதிரடி ஆக்சன் மற்றும் காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகி வருகிறது.

'பெளசி' படம் வரும் டிசம்பர் 3ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகும் என நடிகர் பிரபாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் 'பெளசி' திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காள மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !