உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமந்தாவின் 100 கோடி வசூல் குவித்த 'மா இன்டி பங்காரம்': இந்த வாரம் ஓடிடி வெளியீடு...!

சமந்தாவின் 100 கோடி வசூல் குவித்த 'மா இன்டி பங்காரம்': இந்த வாரம் ஓடிடி வெளியீடு...!


நடிகை நயன்தாராவைத் தொடர்ந்து கதையின் நாயகியாக சமந்தா நடிப்பில் வெளியாகி 100 கோடி வசூலை வாரிக் குவித்த 'மா இன்டி பங்காரம்' முதல் புதிய படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மா இன்டி பங்காரம்

பி.வி. நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடிகை சமந்தா தயாரித்து, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ' மா இன்டி பங்காரம்'. சண்டைக் காட்சிகளில் நடித்துள்ள இந்த படம் தமிழில் எங்கள் தங்கம்' என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது. ஆனால் தெலுங்கை தவிர, மற்ற மொழிகளில் இந்த படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. நடிகை கவுதமி, மஞ்சுஷா, திகந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 100 கோடி வசூலைக் குவிந்த திரைப்படம் நாளை (ஜூலை 17ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

சன்னிதானம் பி.ஓ

அமுதா சாரதி இயக்கத்தில், யோகி பாபு, சித்தாரா, மற்றும் மூணாறு ரமேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ' சன்னிதானம் பி.ஓ'. சபரிமலைக்குச் செல்லும் குழந்தை மாயமானதைத் தேடும் தாயின் நிலை என்ன என்பது போல், திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படம் அமேசான் பிரைம், சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தி டெவில்

கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் ' தி டெவில்'. இந்த படத்தை பிரகாஷ் வீ இயக்கியிருந்தார். திரையரங்குகளில் அதிக வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் நாளை (ஜூலை 17ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

தி ஈஸ்ட் பேலஸ்

கொரியன் வெப் தொடரான ' தி ஈஸ்ட் பேலஸ்' தமிழ் மொழியில் நாளை (ஜூலை 17ம் தேதி) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

23000 லைவ்ஸ்

கடலில் சிக்கியுள்ள அகதிகளைக் காப்பாற்றும் இளம் தன்னார்வலர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்ற கோணத்தில் '23000 லைவ்ஸ்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம் நாளை (ஜூலை 17ம் தேதி) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !